Home
Mobile

5-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

டெக்னோ நிறுவனம் புதிய டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் லேக் ப்ளூ மற்றும் டார்க் ப்ளூ என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி மற்றும் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம்.

 டெக்னோ பாப் 5சி

டெக்னோ பாப் 5சி

விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப் பார்ப்போம். டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் ஆனது 5-இன்ச் FWVGAடிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 480x584 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெக்னோ பாப் 5சி

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் சிறியதாக இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது.

ட் உ

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனின் பின்புறம் 5எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புளுக்கும் என்றே 2எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் AI ஃபேஸ் பியூட்டி, HDR, ஸ்மைல் ஷிட், AI ஸ்டிக்கர் மற்றும்
பொக்கே மோட் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

பார்த்

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த Unisoc SC7731E சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக
இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

த டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனில் 2400

இந்த டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனில் 2400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் புளூடூத் வி4.2, வைஃபை, ஜிபிஎஸ், ஜிஎஸ்எம்,நானோ-சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட, ஜிபிஆர்எஸ், எஃப்எம் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான
டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன்.

டெக்னோ ஸ்பார்க் 8

டெக்னோ ஸ்பார்க் 8

அதேபோல் டெக்னோ நிறுவனம் சமீபத்தில் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதாவது இந்த சாதனம் அட்லாண்டிக் நீலம், ஐரிஸ் ஊதா மற்றும் டர்க்கைஸ் சியான் போன்ற நிறங்களில். மேலும் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியடன் வெளிவந்துள்ளது. பின்பு 720x1,612 பிக்சல் தீர்மானம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி என பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்தது.

குறிப்பாக டெக்னோ

குறிப்பாக டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு AI பியூட்டி, ஸ்மைல் ஷாட், AI போர்ட்ரெய்ட், HDR, AR ஷாட், ஃபில்டர்கள், டைம் லேப்ஸ், பனோரமா மற்றும் ஸ்லோ மோஷன்உள்ளிட்ட கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது டெக்னோ ஸ்பார்க் 8.

Best Mobiles in India

English summary
Tecno Pop 5C Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X