ரூ.8,499-விலையில் அசத்தலான டெக்னோ பாப் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
டெக்னோ நிறுவனம் புதிய டென்கோன பாப் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது டெக்னோ பாப் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
டெக்னோ பாப் 5 ப்ரோ

டெக்னோ பாப் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.52-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக டெக்னோ பாப் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8எம்பி பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ் மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் ஆதரவு, எல்இடி பிளாஷ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
புதிய டெக்னோ பாப் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது HiOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய டெக்னோ பாப் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். குறிப்பாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட இந்த புதிய ஸ்மார்ட்போனை ரூ.8,499-விலையில் வாங்க முடியும். அதேபோல் டீப்சீ லஸ்டர், ஐஸ் ப்ளூ மற்றும் ஸ்கை சியான் நிறங்களில் கிடைக்கும் டெக்னோ பாப் 5 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ பாப் 5 எல்டிஇ
டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,560 பிக்சல் தீர்மானம்மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இந்த ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ மாடல்.மேலும் டீப்சீ லஸ்டர் மற்றும் ஐஸ் ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் வசதி பல ஆப் வசதிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
புதிய டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி மெமரி வசதி உள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன். அதேபோல் புளூடூத் வி4.2, ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, 3.5 எம்.எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஆர்எஸ், 4ஜி எல்டிஇ உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications