Home
Mobile

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

டெக்னோ நிறுவனம் புதிய டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பாகிஸ்தான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் டெக்னோ பாப் 5 எல்டிஇ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ சாதனத்தின் விலை மற்றும் விற்பனை தேதி பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம்.

டெக்னோ பாப் 5 எல்டிஇ

டெக்னோ பாப் 5 எல்டிஇ

இப்போது டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,560 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டெக்னோ பாப் 5 எல்டிஇ

டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இந்த ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ மாடல்.மேலும் டீப்சீ லஸ்டர் மற்றும் ஐஸ் ப்ளூ நிறங்களில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் வசதி பல ஆப் வசதிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

புதிய டெக்னோ பாப் 5 எல்டிஇ

புதிய டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

க்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில்

இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி மெமரி வசதி உள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் புளூடூத் வி4.2, ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, 3.5 எம்.எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஆர்எஸ், 4ஜி எல்டிஇ உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்.

டெக்னோ பாப் 5சி

டெக்னோ பாப் 5சி

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனில் 5-இன்ச் FWVGAடிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 480x584 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெக்னோ பாப் 5சி

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் சிறியதாக இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது.

டெக்னோ பாப் 5சி

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனின் பின்புறம் 5எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புளுக்கும் என்றே 2எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் AI ஃபேஸ் பியூட்டி, HDR, ஸ்மைல் ஷிட், AI ஸ்டிக்கர் மற்றும் பொக்கே மோட் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது டெக்னோ பாப் 5சி.

டெக்னோ பாப் 5சி

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த Unisoc SC7731E சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டெக்னோ பாப் 5சி

டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போனில் 2400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் புளூடூத் வி4.2, வைஃபை, ஜிபிஎஸ், ஜிஎஸ்எம்,நானோ-சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட, ஜிபிஆர்எஸ், எஃப்எம் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ பாப் 5சி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Tecno POP 5 LTE With 5,000mAh Battery Launched: Specs, Features and More: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X