ரூ.6,299 மட்டுமே., அறிமுகமானது டெக்னோ பாப் 5 எல்டிஇ- 14 மொழிகள் ஆதரவு, டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு கோ பதிப்பு!

|

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சாதனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் பல்வேறு விலை பிரிவுகளில் புதுப்புது அம்சங்களோடு சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி டெகனோ நிறுவனம் பட்ஜெட் விலை பிரிவு சாதனங்களில் மிகவும் பிரபலமானவையாகும். டூயல் கேமராக்கள், ஆண்ட்ராய்டு கோ பதிப்பு ஆதரவோடு டெக்னோ பாப் 5 எல்டிஇ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனத்தின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

டெக்னோ பாப் எல்டிஇ அறிமுகம்

டெக்னோ பாப் எல்டிஇ அறிமுகம்

மலிவு மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் டெக்னோ நிறுவனம் பிரபலமான பிராண்டாக மாறி வருகிறது. நிறுவனம் சமீப காலமாக அதன் தயாரிப்பு சலுகைகளை விரிவுப்படுத்தி வருகிறது. அதன்படி இந்த பிராண்டின் சமீபத்திய சாதனமாக டெக்னோ பாப் எல்டிஇ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் பல்வேறு சிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த சாதனம் ரூ.10,000 விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெக்னோ பாப் 5 எல்டிஇ விலை மற்றும் இந்தியாவில் கிடைக்கும் தன்மை

டெக்னோ பாப் 5 எல்டிஇ விலை மற்றும் இந்தியாவில் கிடைக்கும் தன்மை

டெக்னோ பாப் 5 எல்டிஇ விலை மற்றும் இந்தியாவில் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.6299 ஆக இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஷிப்பிங் ஜனவரி 16 முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது ஐஸ் ப்ளூ, டீப்சீ லுஸ்டர் மற்றும் டர்க்கைஸ் சியான் வண்ண விருப்பத்தோடு வருகிறது. டெக்னோ பாப் 5 எல்டிஇ சாதனத்துக்கு அமேசானில் அறிமுகச் சலுகைகள் வழங்கப்படுகிறது.

டெக்னோ பாப் 5 எல்டிஇ அம்சங்கள்

டெக்னோ பாப் 5 எல்டிஇ அம்சங்கள்

டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனானது இந்திய சந்தையில் கிடைக்கும் சமீபத்திய மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே வசதியோடு 1220 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தை கொண்டுள்ளது. பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பை இது கொண்டிருக்கிறது. இது 480 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி வடிவமைப்பு அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனத்தின் வடிவமைப்பு குறித்து பார்க்கையில், டெக்னோ பாப் 5 எல்டிஇ ஆனது ஐபிஎக்ஸ்2 ஸ்பிளாஸ் எதிர்ப்பு கட்டமைப்பை கொண்டிருக்கிறது. ஹீட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போனானது ஐஎம்ஜி பவர் விஆர் ஜிஇ8320 ஜிபியூ உடன் இயக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஏ25 செயலி உடன் வருகிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இதில் இருக்கிறது. அனைத்து டெக்னோ ஸ்மார்ட்போன்களை போன்று இந்த சாதனமும் ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களில் ஒன்று 14 பிராந்திய மொழிகளுக்கான ஆதரவை இது கொண்டிருக்கிறது. டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனானது 8 எம்பி பின்பக்க கேமரா உடன் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்ட ஏஐ கேமரா வசதி இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 5 எம்பி கேமரா வசதி இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனானது நிலையான சார்ஜிங் ஆதரவுடன் இணைக்கப்பட்ட 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டிருக்கிறது. 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் போன்ற வழக்கமான இணைப்பு விருப்பங்கள் இதில் அடங்கும். ஆடியோ ஜாக் மற்றும் எஃப்எம் ரேடியோ ஆதரவும் இதில் உள்ளது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tecno Pop 5 LTE Launched in India With 14 Languages Support, Dual Camera, Android Go Edition

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X