Home
Mobile

டெக்னோவின் பலே ஐடியா: தனித்துவமான கேமரா வசதியுடன் Phantom X2 Pro 5G போன் அறிமுகம்.!

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் Phantom X2 Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக உள்ளிழுக்கும் போர்டிரெயிட் லென்ஸ் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெயரை பெற்றுள்ளது இந்த டெக்னோ போன். குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

AMOLED டிஸ்பிளே..

AMOLED டிஸ்பிளே..

Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Dimensity 9000 5G சிப்செட்

Dimensity 9000 5G சிப்செட்

Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 9000 5G சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனால் விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

50எம்பி retractable portrait கேமரா

50எம்பி retractable portrait கேமரா

Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போன் 50எம்பி Samsung ISOCELL GNV 3.0 கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி retractable portrait கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

கொரில்லா கிளாஸ் விக்டஸ்

கொரில்லா கிளாஸ் விக்டஸ்

Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் இந்த போன் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

5160 எம்ஏஎச் பேட்டரி

5160 எம்ஏஎச் பேட்டரி

5160 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த Tecno Phantom X2 Pro 5G ஸ்மார்ட்போன். எனவே இந்த போனில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

யுஎஸ்பி டைப் சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் மூன்லைட் சில்வர் மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே நிறங்களில் கிடைக்கும். மேலும் இந்த புதிய போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. ஏற்கனவே அமேசான் தளத்தில் இந்த போனின் முன்பதிவு துவங்கி விட்டது. வரும் ஜனவரி 24-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வரும்.

வாடிக்கையாளர்களுக்கு பரிசு

வாடிக்கையாளர்களுக்கு பரிசு

இந்த புதிய டெக்னோ போனை வாங்கும் 600 வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Phantom X2 Pro with retractable portrait lens camera Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X