"பொங்கி எழுந்த Tecno" அறிமுகமான ஒரு போன்! வாயடைத்து போன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..

|

Tecno நிறுவனம் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி நிறுவனம் தற்போது ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது Tecno Phantom X2 ஆகும். Tecno Phantom X2 இல் இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. அது Tecno Phantom X2 மற்றும் Tecno Phantom X2 ப்ரோ மாடல் ஆகும். பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களாக இது அறிமுகமாகி இருக்கிறது.

டெக்னோ போவோ எக்ஸ்2

டெக்னோ போவோ எக்ஸ்2

டெக்னோ நிறுவனம் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன் தான் டெக்னோ போவோ எக்ஸ்2 ஆகும். இது பக்கா ப்ரீமியம் விலை ஸ்மார்ட்போன் ஆகும். இந்த தொடரில் இருக்கும் இரண்டு மாடல்களும் ஒரே சிப்செட், டிஸ்ப்ளே, பேட்டரி போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது. பேட்டரி அடிப்படையில் மட்டும் மாறுபடுகிறது.

விரைவில் இந்தியாவில் கிடைக்கும்

விரைவில் இந்தியாவில் கிடைக்கும்

இரண்டு ஸ்மார்ட்போன்களும் உலகளவில் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Tecno Phantom X2 சீரிஸ்: சிறப்பம்சங்கள்

Tecno Phantom X2 சீரிஸ்: சிறப்பம்சங்கள்

Tecno Phantom X2 சீரிஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதாவது இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது. 5ஜிபி விர்ச்சுவல் ரேமிற்கான ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மார்ஸ் ஆரஞ்ச் மற்றும் ஸ்டார்டஸ்ட் க்ரே வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி

மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி

Tecno Phantom X2 சீரிஸ் ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சீரிஸ் இல் இடம்பெற்றுள்ள இரண்டு மாடல்களிலும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. முழு எச்டி+ தெளிவுத்திறன் உடன் கூடிய 6.8 இன்ச் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.

பஞ்ச் ஹோல் கட்அவுட் உடன் கூடிய வளைந்த டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

5160 எம்ஏஎச் பேட்டரி

5160 எம்ஏஎச் பேட்டரி

Tecno Phantom X2 சீரிஸ் ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த போனை 20 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான HiOS 12.0 இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.

50 எம்பி பிரைமரி கேமரா

50 எம்பி பிரைமரி கேமரா

Tecno Phantom X2 சீரிஸ் இல் இரண்டு மாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பெரும்பாலான அம்சங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், கேமரா பிரிவில் மட்டும் மாறுபட்டு இருக்கிறது.

Phantom X2 Pro ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ராவைட் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

64MP பிரைமரி லென்ஸ்

64MP பிரைமரி லென்ஸ்

Phantom X2 ஸ்மார்ட்போனில் 2 எம்பி மேக்ரோ கேமரா, 13 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் OIS ஆதரவுடன் கூடிய 64MP முதன்மை கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

Phantom X2 சீரிஸ் விலை

Phantom X2 சீரிஸ் விலை

Phantom X2 சீரிஸ் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. Phantom X2 Pro இன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை SAR 3499 (தோராயமாக ரூ.76,700) எனவும் Phantom X2 ஆனது SAR 2699 (தோராயமாக ரூ.59,100) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Tecno Phantom X2 Launched at Globally with 12GB RAM, 64MP Primary Camera and More: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X