Home
Mobile

Amazon-ல இன்னைக்கு கூட்டம் அள்ளுது.! காரணம் இந்த Tecno Phantom X2 போனின் சேல்ஸ் தான்.!

Tecno சமீபத்தில் அதன் Tecno Phantom X2 தொடர் ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியது. டெக்னோ பாண்டம் எக்ஸ் 2 (Tecno Phantom X2) மாடல் ஜனவரி 2 முதல் முன்பதிவு செய்ய கிடைத்தது, இப்போது நிறுவனம் ​​இறுதியாக இன்று முதல் அதன் முதல் விற்பனையை துவங்கியுள்ளது. பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் கலக்கலான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனின் மீது மக்களின் பார்வை பதிந்துள்ளது.

மக்கள் கவனத்தை காந்தம் போல ஈர்த்த ஸ்மார்ட்போனா இது.!

மக்கள் கவனத்தை காந்தம் போல ஈர்த்த ஸ்மார்ட்போனா இது.!

இதற்கு இதனுடைய லுக் ஒரு முக்கியமான அம்சம் என்று நாம் கூறினாலும் கூட, இந்த ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யுல் பெரிய ஈர்ப்பை உருவாக்கி இருக்கிறது என்பதே உண்மை.

இது தவிர இந்த Tecno Phantom X2 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள அம்சங்களும் கூட, அதிக கவனத்தை ஈர்த்துள்ளது என்று தான் நாம் கூற வேண்டும். சரி, இன்று முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் இந்த போனின் விலை என்ன? அறிமுக சலுகையாக உங்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது?

'இதை' மிஸ் செஞ்சுடாதீங்க மக்களே.!

'இதை' மிஸ் செஞ்சுடாதீங்க மக்களே.!

இதன் சிறப்பம்சம் என்ன? இந்த போனை வாங்கலாமா? வேண்டாமா? என்பது போன்ற முழுமையான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

முதலில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் பற்றிப் பார்த்துவிடலாம், அதற்கு பின் - இதன் விலை மற்றும் சிறப்பு தள்ளுபடி விபரங்களை பார்வையிடலாம்.

பதிவின் இறுதியில் இருக்கும் சூப்பர் இன்பர்மேஷனை மிஸ் செய்திடாமல் படிச்சுடுங்க.

டெக்னோ ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் டிஸ்பிளே (Display)

டெக்னோ ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் டிஸ்பிளே (Display)

இந்த டெக்னோ ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் Full HD+ வளைந்த 6.8 இன்ச் AMOLED டிஸ்ப்லேவை கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு (Corning Gorilla Glass Victus Protection) கொண்ட திரை, 120 Hz ரிஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) என்று அனைத்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் இந்த ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் சிப்செட் விபரம் (Storage and Chipset)

ஸ்டோரேஜ் மற்றும் சிப்செட் விபரம் (Storage and Chipset)

இந்த சாதனம் Dimensity 9000 சிப்செட் உடன் ஒரு பிரீமியம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாதனமாக விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த சிப்செட் 8 GB LPDDR5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ள 256 GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் செயல்படுகிறது. இந்த டிவைஸ் Android 12 மற்றும் HiOS 12.1 இல் இயங்குகிறது.

இந்த செப்ஸ்ட் உடன் இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறன் மிகவும் அருமையாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான கேமரா அம்சம் (Camera)

மிரட்டலான கேமரா அம்சம் (Camera)

Tecno Phantom X2 முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா திரையில் மேலே நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், இந்த போன் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா கொண்ட டிரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. பின்புற பேனலில் இது 13-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2-மெகாபிக்சல் கேமராவுடன் இயங்குகிறது.

5ஜி அம்சத்துடன் பாஸ்ட் சார்ஜிங்.. இனி டக்குனு சார்ஜ் ஏற்றலாம்.!

5ஜி அம்சத்துடன் பாஸ்ட் சார்ஜிங்.. இனி டக்குனு சார்ஜ் ஏற்றலாம்.!

இந்த ஸ்மார்ட்போன் கேஜெட்டில் உள்ள 5,160mAh பேட்டரி 45W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றத்திற்காக டைப் C போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 3.5mm ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கரும் (Stereo Speaker), டுவல் சிம் (Dual-SIM), 5G, WiFi 6 802.11, Bluetooth 5.3, NFC, GPS,கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் மூன்லைட் சில்வர் (Moonlight Silver) மற்றும் ஸ்டார் டஸ்ட் க்ரே (Stardust Grey) என்று இரண்டு கலர் வேரியண்டுகளாகப் பளபளப்பான வெளிப்புற தோற்றத்துடன் வருகிறது.

Tecno Phantom X2 விலை மற்றும் அறிமுக சலுகை என்ன?

Tecno Phantom X2 விலை மற்றும் அறிமுக சலுகை என்ன?

Tecno Phantom X2 சிறப்பு வெளியீட்டு விலை ரூ. 39,999 ஆகும். இது இன்று (ஜனவரி 9) மதியம் 12 மணி முதல் Amazon India மூலம் விற்பனைக்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக, ஜனவரி 31 வரை சில சிறப்பு சலுகைகளும் கிடைக்கிறது. Tecno Phantom X2 வாங்கும் போது வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கும்.

Tecno Phantom X2 போன் உடன் கிடைக்கும் மற்ற பெஸ்ட் மேட்டர் என்ன தெரியுமா?

Tecno Phantom X2 போன் உடன் கிடைக்கும் மற்ற பெஸ்ட் மேட்டர் என்ன தெரியுமா?

இத்துடன் 12 மாத அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பும் இலவசமாக வழங்கப்படும். ரூ.6,667 முதல் விலையில்லா EMI மூலமும் இந்த ஃபோன் வாங்க கிடைக்கும்.

பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக் இல் ஒரு 5ஜி டிவைஸை நீங்கள் வாங்க ஆசைப்பட்டால் இந்த சாதனத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஒரு வேலை நீங்கள் இந்த போனை முன்பதிவு செய்திருந்தால், ஃபாண்டம் X3 அறிமுகம் செய்யப்படும்போது இந்த X2 போனை இலவசமாக X3-க்கு மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Phantom X2 Available To Purchase Via Amazon India From Today
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X