2023 ஆரம்பத்திலேயே அதிரவைத்த Phantom X2 5G போன்: என்னென்ன ஸ்பெஷல்! நம்பி வாங்கலாமா?

|

டெக்னோ நிறுவனம் ஒருவழியாக Tecno Phantom X2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டது. குறிப்பாக நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக தரமான சிப்செட், அருமையான கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

முதல் ஸ்மார்ட்போன்?

முதல் ஸ்மார்ட்போன்?

இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 5ஜி சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையைப் பெற்றுள்ளது இந்த Tecno Phantom X2 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!

 curved AMOLED டிஸ்பிளே

curved AMOLED டிஸ்பிளே

Phantom X2 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் curved AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே பயனர்களுக்கு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். பின்பு 1080x2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

தனித்துவமான வடிவமைப்பு

தனித்துவமான வடிவமைப்பு

அதேபோல் பிரத்யேக யுனிபாடி டபுள்-கர்வ்டு பில்டு மற்றும் 3.5D லூனார் கிரேட்டர் டிசைன் கொண்டிருக்கிறது இந்த Phantom X2 5G ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போனில் சிப்செட் வசதி அமைந்துள்ளது. அதாவது இந்த டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் கொடுக்கும் இந்த அற்புதமான ஸ்மார்ட்போன்.

அம்பானி சார்.. தில்லு இருந்தா? BSNL-ஐ போல வெறும் ரூ.329-க்கு இப்படி ஒரு ரீசார்ஜை அறிமுகம் செய்ங்க பார்க்கலாம்!அம்பானி சார்.. தில்லு இருந்தா? BSNL-ஐ போல வெறும் ரூ.329-க்கு இப்படி ஒரு ரீசார்ஜை அறிமுகம் செய்ங்க பார்க்கலாம்!

ஆண்ட்ராய்டு அப்டேட்?

ஆண்ட்ராய்டு அப்டேட்?

HiOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்மார்ட்போன். ஆனால் கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் இதை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணையத்துக்குத் தகுந்தபடி சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

Phantom X2 5G ஸ்மார்ட்போன் விலை

Phantom X2 5G ஸ்மார்ட்போன் விலை

டூயல் சிம், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, என்எப்சி மற்றும் யுஎஸ்பி 2.0 (டைப்-சி) போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்மார்ட்போன். சில்வர் மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே என இரண்டு நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் விலை ரூ.39,999-ஆக உள்ளது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. வரும் ஜனவரி 9-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது இந்த புதிய டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் அனைத்து அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, எனவே இதை நம்பி வாங்கலாம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Tecno Phantom X2 5G is designed to appeal to customers: 1st impressions:Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X