சாம்சங் நிறுவனத்திற்குப் போட்டியாக புதிய ஃபோல்டபில் போன் அறிமுகம் செய்த TECNO.! என்ன விலை?
இந்தியாவில் டெக்னோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு ஆரம்பத்தில் அவ்வளவு வரவேற்பு இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் தற்போது இந்நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய TECNO Phantom V Fold 5G போனை அறிமுகம் செய்துள்ளது டெக்னோ நிறுவனம்.
இந்த டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன் ஆனது தனித்துவமான டிஸ்பிளே மற்றும் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி அம்சங்கள்
டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன் ஆனது 7.85-இன்ச் மடிக்கக்கூடிய LLTPO AMOLED டிஸ்பிளே மற்றும் 6.4-இன்ச் LLTPO AMOLED வெளிப்புற டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் 7.85-இன்ச் டிஸ்பிளே ஆனது 2296x2000 பிக்சல்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு வெளிப்புற 6.42-இன்ச் டிஸ்பிளே ஆனது 1080x2550 பிக்சல்ஸ் வசதியைக் கொண்டுள்ளது.
இந்த போனில் பிரத்யேகமாக ஃபிக்சட் ஆக்சிஸ் ரோடேட் மற்றும் ஸ்லைடு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் உள்ள ரிவர்ஸ் ஸ்னாப் ஸ்டிரக்ச்சர் மடிக்கும் அனுபவத்தைச் சிரமம் அற்றதாகவும், கிரீஸ் அற்றதாகவும் மாற்றுகிறது. குறிப்பாக இந்த போன் இரண்டு லட்சம் முறை சோதனை செய்யப்பட்டு அதன்பின்பு தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன் 3.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 9000+பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதில் மாலி G710 MC10 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த தரமான Dimensity 9000+பிராசஸர்.
HiOS 13 Fold சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய டெக்னோஃபோல்டு போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஃபோல்டு போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன்.

50எம்பி பிரைமரி கேமரா +13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி போர்ட்ரெயிட் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் இந்த போன் 32MP வெளிப்புற / 16 MP உள்புற செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3. யுஎஸ்பி டைப் சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு இந்த டெக்னோ போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி விலை
பிளாக் மற்றும் வைட் நிறங்களில் இந்த டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது இந்த டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன் குறிப்பாக இந்த புதிய போன் ரூ.89,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போனின் விற்பனை தொடங்கும். குறிப்பாக சாம்சங் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக டெக்னோ நிறுவனம் இந்த புதிய போனை அறிமுகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








