Home
Mobile

Google, OnePlus-க்கு சவால் விடும் சீன நிறுவனம்.. டபுள் டிஸ்பிளே கொண்ட Phantom V Flip அறிமுக தேதி இது தான்!

டெக்னோ நிறுவனம் நிறுவனம் தனது போவா 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் இந்த போன்களின் டீசர் வெளியானது. அதேபோல் போவா 5 சீரிஸ் மட்டுமின்றி டெக்னோ பிரான்டு இந்தியாவில் பேன்டம் வி ப்ளிப் (Tecno Phantom V Flip) எனும் மடிக்கக்கூடிய போனையும் அறிமுகம் செய்ய உள்ளது.

குறிப்பாக இந்த டெக்னோ பேன்டம் வி ப்ளிப் போன் ஆனது இந்த ஆண்டு இறுதியில் (நவம்பர் அல்லது டிசம்பர்)அறிமுகம் செய்யப்படும் என டெக்னோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான டெக்னோ பேன்டம் வி ப்ளிப் போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டபுள் டிஸ்பிளே கொண்ட Phantom V Flip அறிமுக தேதி இது தான்!

டெக்னோ பேன்டம் வி ப்ளிப் ஆனது 6.75-இன்ச் ஃபுல் எச்டிடி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2640x1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (Dimensity 8050 )பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ பேன்டம் வி ப்ளிப் மாடல். எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த ப்ளிப் போன். ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 13 மூலம் இந்த டெக்னோ பேன்டம் வி ப்ளிப் போன் இயங்கும்.

8ஜிபி ரேம் (8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த டெக்னோ பேன்டம் வி ப்ளிப் போன் அறிமுகமாகும். பின்பு இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ நிறுவனம். குறிப்பாக கூகுள், ஒன்பிளஸ் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இந்த டெக்னோ பேன்டம் வி ப்ளிப் போனை கொண்டு வருகிறது டெக்னோ நிறுவனம்.

டெக்னோ பேன்டம் வி ப்ளிப் போன் 64எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் பன்ச் ஹோல் 32எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன்.

டபுள் டிஸ்பிளே கொண்ட Phantom V Flip அறிமுக தேதி இது தான்!

4000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ பேன்டம் வி ப்ளிப் போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல அசத்தலான சென்சார் வசதிகளுடன் இந்த புதிய டெக்னோ போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த டெக்னோ பேன்டம் வி ப்ளிப் போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த டெக்னோ பேன்டம் வி ப்ளிப் சற்று உயர்வான விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Phantom V Flip phone with 64MP rear camera will be launched soon: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X