மார்கெட்டே மிரளுது.. 64எம்பி கேமரா.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. அறிமுகமானது புதிய ஃபிளிப் போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா, சாம்சங் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் ஃபிளிப் போன்களை விற்பனை செய்து வருகின்றன. தற்போது இந்த நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் டெக்னோ (TECNO) நிறுவனம் ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி (Phantom V Flip 5G) போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த போனில் 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்பிளே உள்ளது. குறிப்பாக இந்த டிஸ்பிளே 1080×2640 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 100 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த போனில் 1.32-இன்ச் வெளிப்புற டிஸ்பிளேவும் உள்ளது. குறிப்பாக இதன் வெளிப்புற டிஸ்பிளே வட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சின்ன டிஸ்பிளே 360 x 360 பிக்சல்ஸ், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் பிராசஸர் (MediaTek Dimensity 8050 6nm processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனில் ஏஆர்எம் ஜி77 எம்சி9 ஜிபியு (ARM G77 MC9 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. குறிப்பாக போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
64எம்பி RGBW பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போன். எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் இந்த டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போன் வெளிவந்துள்ளது. அதேபோல் HiOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போன். எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு இந்த போனில சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) வருகிறது.

அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். மிஸ்டிக் டான் (Mystic Dawn)மற்றும் ஐகானிக் பிளாக் (Iconic Black) நிறங்களில் லீச்சி-பேட்டர்ன் டிசைன் கொண்ட லெதர் பேக்குடன் வெளிவந்துள்ளது டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போன்.
குறிப்பாக இந்த டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி (TECNO PHANTOM V Flip 5G) ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் இந்த போனை வாங்க முடியும். மேலும் மோட்டோரோலா, சாம்சங் நிறுவனங்களின் ஃபிளிப் போன்களை விட இந்த டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போன் சற்று குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications