எனக்குன்னே வருவீங்களா? எல்லோரும் வாங்கும் விலையில் Tecno Phantom V Flip 2 5G.. லட்ச ரூபாய் Foldகளுக்கு வேட்டு!
Tecno Phantom V Flip 2 5G Price in India: அடேய்.. மவுசு இருக்குனு நம்பி ரூ.1,72,999-க்கு கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Google Pixel 9 Pro Fold) ஸ்மார்ட்போனை இந்தியாவுல அறிமுகம் செஞ்சி இருக்கேன்டா.. அந்த நம்பிக்கையில மண்ண வாரி போட்றாதீங்கடா - இதுதான் கூகுள் நிறுவனத்தின் தற்போதைய மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும். இதற்கு காரணம் டெக்னோ ஃபாண்டம் வி பிளிப் 2 5ஜி (Tecno Phantom V Flip 2 5G) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் தான்!
ஃபோல்டபிள் போனுக்கும் ஃபிளிப் போனுக்கும் "எப்படி முடிச்சுப்போட முடியும்?" என்று நீங்கள் கேட்கலாம் - முடியும். இந்தியர்கள் மத்தியில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கான வரவேற்பு நன்றாக இருக்கிறது தான். அதற்காக எல்லோரும் ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவு செய்து அதை வாங்கிவிட மாட்டார்கள். சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனும் கூட ரூ.1 லட்சத்திற்கு மேல் (ரூ.1,49,999) என்கிற விலை நிர்ணயத்தை தான் பெற்றுள்ளது.

எப்போதுமே இந்தியர்கள் "இதே பிரிவில்" இன்னும் மலிவான விருப்பம் இருக்கிறதா என்றுதான் தேடுவார்கள். அப்படி தேடுவோர்களின் கண்களுக்கு முதல் சிக்குவது ஃபிளிப் ஸ்மார்ட்போன்கள் தான். ஆழமாக பார்த்தால். ஃபிளிப் மாடல்கள் என்பது 'டெக்னீக்கலி' ஃபோல்ட் மாடல்களின் வெண்ணிலா வேரியண்ட்கள் ஆகும். அதாவது ஒரே சீரிஸின் கீழ் அறிமுகமாகும் வெண்ணிலா, ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் அல்லது ப்ரோ பிளஸ் மாடல்களை போன்றது தான்!
இங்கே கூகுளுக்கு உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால்.. அதனிடம் ஃபிளிப் ஸ்மார்ட்போன்கள் இல்லை. இந்த இடத்தில் தான் மற்ற நிறுவனங்களின் ஃபிளிப் போன்களுக்கான கதவு திறக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக.. மலிவான விலை நிர்ணயம் கொண்ட ஃபிளிப் போன்களுக்கு - அதிர்ஷடமே அடிக்கும். அப்படியான அதிர்ஷடத்தை தன்வசம் வைத்துக்கொள்ளு விரும்பும் ஒரு லேட்டஸ்ட் ஃபிளிப் மாடல் தான் - டெக்னோ ஃபாண்டம் வி பிளிப் 2 5ஜி!
மற்றொரு சீன நிறுவனமான ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் உலகளாவிய விலை நிர்ணயம் (ரூ.82,540) லீக் ஆன சில தினங்களில் டெக்னோ ஃபாண்டம் வி பிளிப் 2 ஸ்மார்ட்போனின் விலையும் லீக் ஆகியுள்ளது. சுவாரசியமாக இது ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப்-ஐ விட மலிவாக இருக்கிறது. நம்பக மான டிப்ஸ்டர்களில் ஒருவரான Paras Guglani (@passionategeekz) வழியாக கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் இது ரூ.55,000 - ரூ.60,000 க்குள் அறிமுகம் செய்யப்படும்.
ஒப்பிடுகையில், முன்னதாக வெளியான டெக்னோ ஃபாண்டம் வி பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக அடுத்து வரும் அப்கிரேடட் வெர்ஷனும் கூட "ஒரே மாதிரியான விலைக்கு" வரும் என்பது போல் தெரிகிறது. இது நிச்சயம் ஒரு நல்ல நகர்வு தான்.
ஏனென்றால் சாம்சங்கின் லேட்டஸ்ட் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 (Samsung Galazy Z Flip 6) ஸ்மார்ட்போன் ரூ.1,09,999 க்கும், மோட்டோரோலாவின் லேட்டஸ்ட் ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra) ஸ்மார்ட்போன் ரூ.94,999 க்கும் வாங்க கிடைக்கிறது. எப்படி பார்த்தாலும் மலிவான விருப்பத்தை தேடும் அனைவருமே - கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள - டெக்னோ ஃபாண்டம் வி பிளிப் 2 மாடலுக்கு தான் செல்வார்கள்!
டெக்னோ ஃபாண்டம் வி பிளிப் 2-வில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 6.9-இன்ச் AMOLEDப்ரைமரி டிஸ்பிளே + 1.32-இன்ச் கவர் டிஸ்பிளே, ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 64 மெகாபிக்சல் + 13 மெகாபிக்சல் அவுட்டர் கேமராக்கள், 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 4000mAh பேட்டரி போன்றவைகளை பேக் செய்யலாம்!


Click it and Unblock the Notifications








