10-இன்ச் டிஸ்பிளே.. 3 ஆக மடித்து லேப்டாப் போல பயன்படுத்தலாம்.. மொத்த மார்க்கெட்டையும் திணறவிடும் TECNO போன்!
Tecno Phantom Ultimate 2: கடந்த சில நாட்களாக லீக் புகைப்படங்கள் வழியாக.. ஓரஞ்சாரமாக காட்சி அளித்துக் கொண்டிருந்த டெக்னோ நிறுவனத்தின் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது.. ஒருவழியாக முழுமையாக மற்றும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. டெக்னோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு - டெக்னோ ஃபாண்டம் அல்டிமேட் 2 (Tecno Phantom Ultimate 2) என்று பெயரிட்டுள்ளது. இது ஒரு ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கான்செப்ட் (Tri-fold smartphone concept) ஆகும்.
ட்ரை ஃபோல்ட் என்கிற பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த ஸ்மார்ட்போனில் டூயல்-ஹிஞ் மெக்கானிசம் (Dual-hinge mechanism) பயன்படுத்தப்பட்டு உள்ளது, இதன் மூலம் டெக்னோ ஃபாண்டம் அல்டிமேட் 2 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை மூன்றாக மடிக்க முடியும். நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனம் தனது ரோலபிள் ஸ்மார்ட்போன் கான்செப்ட் (Rollable smartphone concept) ஆன டெக்னோ பாண்டம் அல்டிமேட்டை (Tecno Phantom Ultimate), 2024 மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது.

தற்போது அந்த ஸ்மார்ட்போனின் அப்கிரேட் ஸ்மார்ட்போன் கான்செப்ட் ஆக டெக்னோ ஃபாண்டம் அல்டிமேட் 2 ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. டெக்னோவின் இந்த புதிய கான்செப்ட் ஸ்மார்ட்போன் ஆனது மடிந்திருக்கும் போது கச்சிதமான கேண்டி பார் ஃபார்ம் ஃபேக்டரை (Compact candy bar form factor) கொண்டுள்ளது.
அதே சமயம் திறக்கப்படும் போது ஒரு பெரிய 10-இன்ச் இன்னர் டிஸ்பிளேவாக விரிவடைகிறது. டெக்னோ ஃபாண்டம் அல்டிமேட் 2 ஸ்மார்ட்போன் ஆனது முழுக்க-முழுக்க ஒரு கான்செப்ட் ஸ்மார்ட்போன் ஆகும் என்பதால், இது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? போன்ற கேள்விகளுக்கு இங்கு வேலை இல்லை. இருப்பினும் இது வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்கிற விவரங்களை டெக்னோ பகிர்ந்துள்ளது.
டெக்னோ பாண்டம் அல்டிமேட் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? டெக்னோவின் கூற்றுப்படி, பாண்டம் அல்டிமேட் 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.48-இன்ச் கவர் டிஸ்பிளே மற்றும் 1620 x 2880 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட ஒரு பெரிய 10-இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 4:3 ரேஷியோவை கொண்டுள்ளது
டெக்னோவின் படி, டிடிடிஐ (TDDI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டச் அன்ட் டிஸ்பிளே ட்ரைவர் இன்டெக்ரேஷன் (Touch and display driver integration) என்கிற தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் சந்தையின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் இதுவாகும். அதாவது இந்த ஸ்மார்ட்போனின் சிப் ஆனது டிஸ்பிளே ட்ரைவர் மற்றும் டச் சென்சார் ஆகிய இரண்டையும் தன்வசம் கொண்டிருக்கும்.
அளவீடுகளை பொறுத்தவரை, டெக்னோ பாண்டம் அல்டிமேட் 2 ஸ்மார்ட்போன் ஆனது 11 மிமீ மெல்லியதாக உள்ளது. இது மிகவும் சமீபத்தில் அறிமுகமான கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட்டை விட 1.5 மிமீ அதிகமாகும். இருப்பினும் சந்தையில் உள்ள மற்ற புக்-ஸ்டைல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை போலவே ஸ்லிம் டிசைனை பெற்றுள்ளது.
மடிந்திருக்கும் போது, இது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 மாடலை விட சலின் ஆக உள்ளது. ஃபோல்ட் 6-ஐ மடிக்கும்போது அதன் தடிமன் 12.1 மிமீ ஆக உள்ளது. போதாக்குறைக்கு இது டூயல்-ஹிஞ் மெக்கானிசமையும் கொண்டுள்ளது. இது 300,000 ஃபோல்ட் மற்றும் அன்ஃபோல்ட் உள்ளடக்கிய சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக டெக்னோ கூறுகிறது.
எல்லாவற்றை விட முக்கியமாக இந்த ஸ்மார்ட்போனில் 0.25 மிமீ தடிமன் கொண்ட அல்ட்ரா-ஸ்லிம் பேட்டரியும் உள்ளது. டெக்னோவின் இந்த ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கான்செப்ட் ஆனது காட்சிப்படுத்தப்பட்டாலும் கூட இது எப்போது உற்பத்திக்கு வரும் என்பதை டெக்னோ நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.
கான்செப்ட் ஸ்மார்ட்போன்கள் பொதுவாக நிறுவனத்தின் உற்பத்தி திறன் மற்றும் அதன் வளர்ச்சியில் இருக்கும் தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்தவே அறிமுகப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், மற்றொரு சீன நிறுவனமான ஹூவாயின் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் - இப்படி ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் உலகின் முதல் நிறுவனமாக ஹூவாய் மாறும். இந்த ஸ்மார்ட்போன் 2024 அக்டோபரில் அறிமுகம் செய்யப்படலாம்!


Click it and Unblock the Notifications








