Home
Mobile

ரூ.10,000 பட்ஜெட்டில் பக்காவான அம்சங்கள்.. பெயருக்கு ஏற்ற மாதிரி தீயா இருக்கேப்பா.. என்ன மாடல்?

சீன மொபைல் நிறுவனமான டெக்னோ ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் நல்ல-நல்ல ஸ்மார்ட்போன்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் கூடிய விரைவில் இன்னொரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதென்ன மாடல்? என்னென்ன அம்சங்கள்? என்ன விலை?

நாம் இங்கே பேசுவது டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, டெக்னோ ஸ்பார்க் 20சி மாடலானது கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகமான டெக்னோ ஸ்பார்க் 10சி ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வாரிசாக இருக்கும்.

ரூ.10,000 பட்ஜெட்டில் பக்காவான அம்சங்கள்.. என்ன மாடல்?

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் (Octa-core MediaTek Helio P35 SoC) மூலம் இயக்கப்படலாம். சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ஹைஎஸ் 13 மூலம் இயக்கப்படலாம்.

கீக்பெஞ்ச் லிஸ்ட்டிங்கின் படி, டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள்-கோர் டெஸ்டில் 168 மதிப்பெண்களையும், மல்டி-கோர் டெஸ்டில் 928 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. 4ஜிபி ரேம் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த டெக்னோ ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டியுடனும் வரலாம்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி எல்டிஇ ஆதரவு, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ரியர் கேமரா செட்டப், 128 ஜிபி ஸ்டோரேஜ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவைகளை பேக் செய்யலாம். விலையை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.10,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் ஆனது டெக்னோ ஸ்பார்க் 20 சீரீஸின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். டெக்னோ ஸ்பார்க் 20 மாடலை பொறுத்தவரை, இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 50-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், 5000mAh பேட்டரி போன்றவைகளை பேக் செய்யலாம்.

டெக்னோ பிராண்ட் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, சில வாரங்களுக்கு முன்னர் தான் டெக்னோ நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி (Tecno Phantom V Flip 5G) ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமானது.

டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய சந்தையில் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது. அம்சங்களை பொறுத்தவரை, இது 6.9-இன்ச் FHD+ (2400 x 1080 பிக்சல்ஸ்) பிளெக்ஸிபிள் AMOLED இன்னர் டிஸ்பிளே, ஆல்வேஸ்-ஆன் அம்சத்துடன் கூடிய வட்ட வடிவிலான 1.32 இன்ச் AMOLED கவர் பேனலையும் கொண்டுள்ளது.

டெக்னோவின் இந்த கிளாம்ஷெல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8050 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபிB LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13.5 ஓஎஸ் உடன் அனுப்பப்படுகிறது மற்றும் இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் மூன்று வருட செக்யூரிட்டி பேட்ச்களை வழங்குவதாக டெக்னோ உறுதியளிக்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ரியர் பேனலில் 64-மெகாபிக்சல் மெயின் சென்சார் + 13-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. இதன் கேமரா யூனிட்டில் குவாட் ஃப்ளாஷ்லைட்டும் உள்ளது. செல்பீ கேமராவை பொறுத்தவரை, மெயின் டிஸ்பிளேவின் மேற்புறத்தில் உள்ள ஹோல்-பஞ்ச் ஸ்லாட்டில் 32 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. கடைசியாக இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno New budget smartphone Spark 20C Expected Specifications Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X