மிரட்டி விட்டாப்ல.. 6.39 மி.மீ. பாடியில் 5600mAh பேட்டரி.. 60W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
அல்ட்ரா ஸ்லிம் பாடியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருக்கிறது. இதில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களையே தூக்கி சாப்பிடும்படி டெக்னோ நிறுவனமானது, அதனுடைய கேமன் சீரிஸ் மாடல்களை களமிறக்கி வருகிறது. இதில் டெக்னோ கேமன் ஸ்லிம் (Tecno Camon Slim) அறிமுகமாகி இருக்கிறது.
சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களில் மட்டுமே அல்ட்ரா ஸ்லிம் மாடல்கள் கிடைக்கின்றன. ஆனால், இதன் விலை பிரீமியமாக இருக்கும். ஆனால், கேமன் சீரிஸ் மாடல்கள் பட்ஜெட்டில் ஸ்லிம் மாடல்களை கொடுக்கிறது. இப்போது, குளோபல் மார்கெட்டில் டெக்னோ கேமன் ஸ்லிம் மாடலை 6.39 எம்எம் தடிமனில் களமிறக்கி இருக்கிறது.

டெக்னோ கேமன் ஸ்லிம் அம்சங்கள் (Tecno Camon Slim Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி200 அல்டிமேட் (Octa Core MediaTek Helio G200 Ultimate) சிப்செட்டை இந்த டெக்னோ கேமன் ஸ்லிம் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஹாய்ஓஎஸ் 16.2 (HiOS 16.2) கிடைக்கிறது.
மூன்று வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களை கொடுக்கிறது. 6.78 இன்ச் (1224 x 2720 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த டெக்னோ கேமன் ஸ்லிம் ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரியை கொடுத்துள்ளது.
12 லேயர் கூலிங் சிஸ்டம் (Cooling System) கொண்ட மாடலாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கிடைக்கிறது. ஃபிளிக்கர் சென்சாரும் (Flicker Sensor) சென்சாரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 354 மினி எல்இடி லைட்களுடன் மல்டி சீன் லைட்னிங் எபெக்ட்கள் (Multi-scene Lighting Effects) கிடைக்கின்றன,
இதை இன்கம்மிங் கால்கள் (Incoming Calls), மேசேஜ்கள் (Messages) மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களுக்கு இன்டிகேட்டர் போல பயன்படுத்தி கொள்ளலாம். சார்ஜிங் ஸ்டேட்டஸ் (Charging Status) இதில் கொடுக்கப்படுகிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கா 32 எம்பி செல்பீ கேமராவை இந்த டெக்னோ கேமன் ஸ்லிம் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
60W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5600mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 5 வருட ஹெல்த் வாரண்டி கொடுக்கப்படுகிறது. இந்த பேட்டரியுடன் வெறும் 6.39 எம்எம் தடிமன் வருகிறது. IP69 ரேட்டிங் + IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த டெக்னோ கேமன் ஸ்லிம் இருக்கிறது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன. பிரீமியம் மாடல்களுக்கு நிகரான வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மட்டுமல்லாமல், எம்ஐஎல்-எஸ்டிடி-810 (MIL-STD-810) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை இந்த டெக்னோ கேமன் ஸ்லிம் பேக் செய்துள்ளது.
ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், விலை விவரங்கள் வெளியாகவில்லை.
பர்கண்டி ரெட் (Burgundy Red), ஜங்கிள் கிரீன் (Jungle Green), நியூ மாண்ட்ரியன் (New Mondrian), பிரிசம் பிளாக் (Prism Black) மற்றும் வான் கோக் ப்ளூ (Van Gogh Blue) ஆகிய கலர்களில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவிலும் கேமன் சீரிஸ் மாடல்கள் கிடைக்கின்றன. ஆகவே, இந்த டெக்னோ கேமன் ஸ்லிம் ஸ்மார்ட்போனையும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications