Home
Mobile

பிரிச்சி விட்டாப்ல TECNO.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனத்தின் ஸ்லிம் ஸ்மார்ட்போன் மாடலான டெக்னோ கேமன் ஸ்லிம் 5ஜி (TECNO CAMON Slim 5G) சத்தமே இல்லாமல் களமிறங்கி இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300இ சிப்செட் மட்டுமல்லாமல், 6.39 எம்எம் பாடியில் 6000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. விலை விவரங்கள் உறுதியாகிவில்லை.

இப்போது, குளோபல் மார்கெட்டில் இந்த டெக்னோ கேமன் ஸ்லிம் 5ஜி களமிறங்கி இருக்கிறது. அண்டர்வாட்டர் போட்டோகிராபி கொண்ட ஸ்லிம் மாடலாக இருப்பதால், டிசைன் பிரியர்கள் மட்டுமல்லாமல் கேமரா பிரியர்களிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

பிரிச்சி விட்டாப்ல TECNO.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. மாடல்?

டெக்னோ கேமன் ஸ்லிம் 5ஜி அம்சங்கள் (TECNO CAMON Slim 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300இ 5ஜி (Octa Core MediaTek Dimensity 7300e 5G) சிப்செட்டை இந்த டெக்னோ கேமன் ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஹைய்ஒஎஸ் 16 (HiOS 16) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டெக்னோ ஏஐ (TECNO AI) கிடைக்கிறது. 6.78 இன்ச் (1208 x 2644 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரெயின் டச் (Rain Touch) மற்றும் வாட்டர்ப்ரூப் கேஸ் டச் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டெக்னோ கேமன் ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 8 ஜிபிக்கு விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது.

சோனி லைட்டியா 700சி (Sony LYTIA 700C) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. அல்ட்ரா நைட் மெயின் கேமராவாக இது இருக்கிறது. ஆகவே, நைட் போட்டோகிராபி பக்காவாக இருக்கும். ஆட்டோ போகஸ் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்து இருக்கிறது. மேலும், ஃபிளிக்கர் சென்சார் (Flicker Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிளாஷ்ஸ்னாப் 2.0 (FLASHSNAP 2.0), சூப்பர் நைட் மோட் (SUPER NIGHT MODE) உள்ளது. 24 எம்எம், 35 எம்எம் உள்ளிட்ட மல்டி-போகல் லென்த் போர்ட்ராய்டு (Multi-Focal Length Portrait) கொடுக்கப்பட்டு இருக்கிறது. அண்டர்வாட்டர் போட்டோகிராபி (Underwater Photography) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், லைவ் போட்டோ (LIVE PHOTO) பீச்சர் கிடைக்கிறது.

32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி மற்றும் 5 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டி கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் கிடைக்கிறது. நியோ மாண்ட்ரியன் (Neo Mondrian), காஸமர் வைட் (Gossamer White), மாடிஸ் பிளாக் (Matisse Black), ரெபல் பிங்க் (Rebel Pink) கலர்கள் உள்ளன.

மேலும், வான் கோக் ப்ளூ (Van Gogh Blue) மற்றும் பர்கண்டி ரெட் (Burgundy Red) ஆகிய கலர்களிலும் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே குளோபல் தளத்தில் உறுதியாகி இருக்கிறது. விலை மற்றும் விற்பனை விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை. ஓரிரு வாரங்களில் உறுதியாக வாய்ப்புள்ளது. இந்திய மார்கெட்டில் டெக்னோ மாடல்கள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
TECNO CAMON Slim 5G With MediaTek Dimensity 7300e Chip 50MP Camera Launched Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X