பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் "டெக்னா கமோன் ஐகிளிக் 2".!
டெக்னா மொபைல் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் மாடலை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
டெக்னா மொபைல் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் மாடலை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
டெக்னா நிறுவனத்தின் கமோன் சீரிஸ் ஸ்மார்ட் போன் வரிசையில், அடுத்த புது பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்னாக டெக்னா கமோன் ஐகிளிக் 2 ஸ்மார்ட் போனினை டெக்னா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

கமோன் சீரிஸ்
இந்த புதிய டெக்னா கமோன் ஐகிளிக் 2 ஸ்மார்ட் போன், அந்நிறுவனத்தின் கமோன் ஐஏர் 2, கமோன் ஐ2 மற்றும் கமோன் ஐ2X ஸ்மார்ட் போன் மாடலை தொடர்ந்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னா கமோன் ஐகிளிக் 2
டெக்னா கமோன் ஐகிளிக் 2 ஸ்மார்ட் போன் ஏ.ஐ செல்பி கேமரா சேவை, பேஸ் அன்லாக் சேவை மற்றும் இன்னும் பலவித சேவைகளுடன் பட்ஜெட் விலையில் அனைத்து ஆப்லைன் ரீடைல் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று டெக்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெக்னா கமோன் ஐகிளிக் 2 சிறப்பம்சங்கள் :
- 6.2' இன்ச் முழு எச்.டி உடன் கூடிய இன்பினிட்டி நாட்ச் டிஸ்பிளே
- 64 பிட் மீடியா டெக் ஹெலியோ பி22 ப்ராசஸர்
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 128ஜிபி வரையிலான விரிவாக்க சேமிப்பு
- 13 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமரா
- 24 மெகா பிக்சல் ஏ.ஐ செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் நானோ சிம் & மெமரி கார்டு ஸ்லாட்
- 4ஜி வோல்ட்இ
- வைப்பை
- ப்ளுடூத்
- 3750 எம்.ஏ.எச் பேட்டரி
விலை : ரூ.13,499
நிறம் : அக்வா ப்ளு, ஹவாய் ப்ளு மற்றும் மிட்நைட் பிளாக்.

டெக்னா சலுகை
இத்துடன் கூடுதல் சலுகையாக டெக்னா நிறுவனம் ஐகிளிக் 2 ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு இலவசமாக ஒரு முறை ஸ்க்ரீன் மாற்றித்தரப்படும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் ஜியோ பயனர்களுக்குக் கூடுதல் 50ஜிபி டேட்டா உடன் கூடிய ரூ.2,500 க்கான கேஷ்பேக் வழங்கப்படுமென்று அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications