Home
Mobile

மூன்று ரியர் கேமராவுடன் ரூ.9,599-விலையில் டெக்னோ கமோன் ஐ4 சாதனம் அறிமுகம்.!

இக்கருவி 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளதுää மேலும் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

இந்திய சந்தையில் டெக்னோ மொபைல் நிறுவனம் தனது கமோன் ஐ4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், தங்கம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.9,599-விலையில் டெக்னோ கமோன் ஐ4 சாதனம் அறிமுகம்.!

குறிப்பாக கமோன் ஐ4 சாதனத்தின் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு கைரேகை ஸ்கேனர், சிறந்த மென்பொருள் அம்சம், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

டெக்னோ கமோன் ஐ4 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் எச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1500 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 64-பிட் மீடியாடெக் ஹீலியோ ஏ22(எம்டிகே 6761) குவாட்-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கேமரா:

கேமரா:

டெக்னோ கமோன் ஐ4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,
செயற்கை நுண்ணறிவு அம்சம் இதனுள் அடக்கம்.

சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதல்
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு டெக்னோ
கமோன் ஐ4 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.9,599-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Tecno Camon i4 launched with 6.22-inch HD+ display and triple rear cameras at Rs 9,599: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X