Subscribe to Gizbot

ரூ.8,999/-க்கு வேறென்னே அம்சங்கள் வேண்டும்.? இதுவே அதிகம்.!

Written By:

டெக்னோ மொபைல் நிறுவனம் இன்று, இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆனை டெக்னோகமோன் I கருவியை ரூ.8,999/- என்கிற பட்ஜெட் விலைப்பிரிவின்கீழ் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடலாமென 'டீஸ்' செய்யப்பட்டு வந்த டெக்னோ மொபைல் நிறுவனம் ஒருவழியாக அதன் பட்ஜெட் ஸ்மார்ட்போனை இன்று அறிவித்துள்ளது.

ரூ.8,999/-க்கு வேறென்னே அம்சங்கள் வேண்டும்.? இதுவே அதிகம்.!

வெளியாகியுள்ள கமோன் I ஆனது ஒரு 18:9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையை ஆளும் பெரும்பாலான நிறுவனங்கள் கூட இன்னும் 18:9 விகிதம் என்கிற பாணியை கையிலெடுக்காத நிலைப்பாட்டில் இந்த புதிய சாதனம் சற்று கவனிக்கத்தக்க ஒரு ஸ்மார்ட்போனாகவே தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டெக்னோ கமோன் I

டெக்னோ கமோன் I

பட்ஜெட் பிரிவில் களமிறங்கி இருந்தாலும் கூட, 13எம்பி என்கிற கண்ணியமான செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இந்த டெக்னோ காமோம் I ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட நிலைப்பாட்டில் இதன் ஆன்லைன் விற்பனை பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

இக்கருவி மொத்தம் மூன்று வண்ண விருப்பங்கள் கிடைக்கும் - சாம்பெய்ன் தங்கம், மிட்நைட் பிளாக் மற்றும் சிட்டி ப்ளூ. உலோக உடல் வடிவமைப்பை கொண்டுள்ள இக்கருவி கைரேகை ஸ்கேனர் ஒன்றை அதன் பின்புறத்தில் கொண்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

கமோன் I ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சமாக அதன் 5.6 அங்குல எச்டி ப்ளஸ் டிஸ்பிளே திகழ்கிறது. இது 1440 × 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டிருக்கிறது. உடன் இதன் 2.5டி வளைவான கண்ணாடி மேல்புறமானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் எம்டி6737 எஸ்ஓசி

மீடியாடெக் எம்டி6737 எஸ்ஓசி

டிஸ்பிளே மட்டுமின்றி மேலுமொரு பிரதான அம்சமாக இதன் மீடியாடெக் எம்டி6737 எஸ்ஓசி திகழ்கிறது. இது 1.3 ஜிகாஹெர்ட்ஸ் உடனான நான்கு கோர்கள் கொண்ட க்வாட்கோர் சிப்செட் ஆகும். இந்த சிப்செட் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைந்துள்ளது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

அதிர்ஷ்டவசமாக, இந்த தொலைபேசியில் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் சேர்க்கபட்டுள்ளதால் அதன்வழியாக 64ஜிஇ வரை மெமரி நீட்டிப்பை நிகழ்த்தலாம். இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான ஹைஓஎஸ் கொண்டு இயங்குகிறது. இதன் ஓரியோ அப்டேட் பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.

கேமரா

கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், முன் மற்றும் பின்பக்கம் இரண்டிலுமே ஒரு ஒற்றை 13எம்பி கேமராவை கொண்டுள்ளது. இதன் பின்புற கேமரா குறைந்த ஒளி படங்களில் இன்னும் அதிக ஒளி சேர்க்கும் வண்ணம் க்வாட் எல்இடி ப்ளாஷ் ஒன்றை கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் போன்ற அடிப்படை மற்றும் தேவையான இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ள இக்கருவி ஒரு 3050எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது மிதமான பயன்பாட்டில் முழுமையான நாளுக்கு நீடிக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Tecno Camon I Smartphone With 4G VoLTE Support, HD+ Display, 13MP Selfie Camera Launched at Rs 8,999. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot