ஒத்த போனுக்கு மொத்த மார்கெட் மிரளுது.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலுக்கு இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் 7.75 எம்எம் தடிமன் கிடைத்தால் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான லுக் கிடைக்கும். இப்படியான டிசைன் மற்றும் டிஸ்பிளேவுடன் டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி (TECNO CAMON 50 Ultra 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.
குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகிய இந்த டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 17ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதால், அதில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு உள்ளது. 3 கலர்களில் கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

மூன்ஷேடோவ் பிளாக் (Moonshadow Black), சைப்ரஸ் கிரீன் (Cypress Green), நெபுளா டைட்டானியம் (Nebula Titanium), லுமினஸ் ஆரஞ்ச் (Luminous Orange) மற்றும் மிஸ்டி பர்பிள் (Misty Purple) ஆகிய கலர்களில் குளோபல் வேரியண்ட் வெளியாகியது. ஆனால், இந்தியாவில் சைப்ரஸ் கிரீன், மிஸ்டி பர்பிள் மற்றும் நெபுளா டைட்டானியம் ஆகிய 3 கலர்கள் மட்டுமே வெளியாக இருக்கின்றன.
டிசைனில் எந்த மாற்றமும் கிடையாது. குளோபல் வேரியண்ட்டை போலவே இருக்கிறது. ஆகவே, பீச்சர்களிலும் மாற்றங்கள் இருக்காது. இதனால், குளோபல் வேரியண்ட்டில் கிடைத்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இதே பீச்சர்களை அடுத்தடுத்த நாட்களில் டெக்னோ இந்தியா (TECNO India) நிறுவனம் வெளியிட வாய்ப்புள்ளது.
டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 50 Ultra 5G Specifications): பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்டிமேட் (Octa Core MediaTek Dimensity 7400 Ultimate) சிப்செட்டை பேக் செய்துள்ளது. ஹைய்ஓஎஸ் 16 (HiOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்துள்ளது.
டெக்னோ ஏஐ (TECNO AI) கொண்டுள்ளது. இதில் ஏஐ ஆர்ட் கேலரி (AI Art Gallery), ஏஐ லைட் மாஸ்டர் (AI LightMaster 2.0), ஏஐ பிளார் ரிமூவர் (AI Flare Remover), ஏஐ ரெப்ஃளெக்சன் ரிமூவர் (AI Reflection Remover), ஏஐ ஷோடோ ரிமூவர் (AI Shadow Remover), 3டி போட்டோஸ்பேஸ் (3D PhotoSpace) கிடைக்கிறது. ஏஐ இமேஜ்-டு-வீடியோ ஜெனரேட்டர் (AI Image-to-Video Generator) உள்ளது.
இப்படி ஏகப்பட்ட ஏஐ கேமரா பீச்சர்களை கொடுத்துள்ளது. மேலும், ஏஐ மைண்ட்ஹப் (AI MindHub), ஒன்-டேப் பிளாஸ்மெமோ (One-Tap FlashMemo) உள்ளிட்ட பீச்சர்களையும் கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 Zம்பி டெலிபோட்டோ கேமரா + ஃபிளிக்கர் சென்சார் கொண்ட கேமரா செட்டப்பை இந்த கேமன் 50 அல்ட்ரா 5ஜி மாடல் கொடுக்கிறது.
சோனி லைடியா 700சி (Sont LYTIA 700C) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கேமராவுக்கு பெஸ் மொமெண்ட் 2.0 (Best Moment 2.0), ஏஐ 100எக்ஸ் சூப்பர் ஜூம் (AI 100x SuperZoom), ஏஐ ஆட்டோ ஜூம் (AI Auto Zoom) மற்றும் அண்டர்வாட்டர் போட்டோகிராபி (Underwater Photography) சப்போர்ட் கிடைக்கிறது.
அண்டர்வாட்டர் போட்டோகிராபி கிடைப்பதால், IP69K ரேட்டிங், IP69 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP66 கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது. 6.78' இன்ச் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 6500mAh பேட்டரி, 45W சார்ஜிங் உள்ளது. இதே பீச்சர்களை இந்திய வேரியண்ட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications