மார்க்கெட்டே அதிர போகுது.. 6500mAh பேட்டரி.. வருகிறது புது TECNO 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?
டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி (TECNO CAMON 50 Ultra 5G) ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படும் முன்பு முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 50 Ultra 5G specifications): 6.78-இன்ச் 1.5கே 3டி கர்வ்டு அமோலெட்(1.5K 3D curved AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவரும் இந்த டெக்னோ ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2644 × 1208 பிக்சல்ஸ், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2304Hz பிடபுள்யூஎம் டிம்மிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்டிமேட் 4என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 7400 Ultimate 4nm processor) உடன் டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் புதிய டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதுவும் HiOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி LYT-700C மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ரியர் கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போனில் உள்ளன. அதுவும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த போன் வெளிவரும்.

இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டூயல் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
மேலும் 6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். 5ஜி. டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய டெக்னோ போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் ரூ.35,000-க்கு கீழ் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications