Home
Mobile

பின்றானே இவன்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 6150mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனத்தின் கேமன் 50 சீரிஸ் (CAMON 50 Series) மாடல்கள் குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. ஹீலியோ ஜி200 அல்டிமேட் சிப்செட், 3டி கரவ்ட் அமோலெட் டிஸ்பிளே, 6150mAh பேட்டரி மற்றும் பிரீமியம் டிசைனில் மிரளவிடும்படி இருக்கின்றன. இந்த டெக்னோ கேமன் 50 சீரிஸ் மாடல்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

டெக்னோ கேமன் 50 (TECNO CAMON 50) மற்றும் டெக்னோ கேமன் 50 ப்ரோ (TECNO CAMON 50 Pro) ஆகிய மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. குளோபல் மார்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட மற்ற மார்கெட்களில் விரைவில் எதிர்பார்க்கலாம். இருப்பினும், கென்யா மார்கெட்டில் விலை நிர்யணம் செய்யப்பட்டுவிட்டது.

பின்றானே இவன்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 6150mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

டெக்னோ கேமன் 50 அம்சங்கள் (TECNO CAMON 50 Specifications): மீடியாடெக் ஹீலியோ ஜி200 அல்டிமேட் சிப்செட் மற்றும் ஹைய்ஓஎஸ் 16 கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டுள்ளது. 6.78 இன்ச் (1208 x 2644 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொடுத்துள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைத்துள்ளது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் அல்ட்ரா வைடு கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. மேலும், ஏஐ லைட்மாஸ்டர் 2.0 (AI LightMaster 2.0) உள்ளது.

போட்டோஸ்பேஸ் 3டி (PhotoSpace 3D) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஒன் டேப் டெக்னோ ஏஐ (One-Tap TECNO AI) கொடுக்கப்பட்டு உள்ளது. IP69K ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 6150mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ரூ.26,300 பட்ஜெட்டில் வந்துள்ளது.

பின்றானே இவன்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 6150mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

டெக்னோ கேமன் 50 ப்ரோ அம்சங்கள் (TECNO CAMON 50 Pro Specifications): மீடியாடெக் ஹீலியோ ஜி200 அல்டிமேட் (MediaTek Helio G200 Ultimate) சிப்செட்டை இந்த கேமன் 50 ப்ரோ கொடுத்துள்ளது. ஹைய்ஓஎஸ் 16 (HiOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.78 இன்ச் (1208 x 2644 பிக்சல்கள்) கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது.

இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்துள்ளது. 32 எம்பி செல்பீ கேமராவை இந்த டெக்னோ கேமன் 50 ப்ரோ கொண்டுள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6150mAh பேட்டரியை கொடுத்துள்ளது. டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. கென்யா மார்கெட்டில் வெளியாகிவிட்டது. அங்கு ரூ.30,832 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
TECNO CAMON 50 CAMON 50 Pro With 50MP Camera Launched Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X