செய்கைனா இதுதான்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்கள் மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் டெக்னோ கேமன் 30எஸ் (Tecno Camon 30S) களமிறங்கி இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், யுனிவர்சல் டோன், ஏஐஜிசி போர்ட்ராய்டு, ஏஐ எரைசர் போன்ற கேமரா பீச்சர்களிலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன், 120HZ ரெஃப்ரெஷ் ரேட், அக்வா டச் போன்ற டிஸ்பிளே பீச்சர்களிலும் மிரளவிட்டுள்ளது. இந்த டெக்னோ கேமன் போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.
டெக்னோ கேமன் 30எஸ் அம்சங்கள் (Tecno Camon 30S Specifications): இந்த டெக்னோ போனில் 6.78 இன்ச் (1080 x 2436 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) புரொடெக்சன் மற்றும் அக்வா டச் (Aqua Touch) சப்போர்ட் வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. கூடவே, லோவ் ப்ளூலைட் சர்டிபிகேஷன் கொண்டிருக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் பிரீமியம் மற்றும் ஃபிளிக்கர்-ஃபிரீ அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த கேமன் 30எஸ் போனில் 3 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன.
6ஜிபி ரேம் + 6ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. அதேபோல 8ஜிபி ரேம் + 8ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. ஆகவே, 12ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 16ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், 16ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் இந்த டெக்னோ கேமன் 30எஸ் போனில் கிடைக்க இருக்கிறது.
சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stablization) மற்றும் 100 எம்பி அல்ட்ரா கிளியர் மோட் (Ultra Clear Mode) வருகிறது. மேலும், 2 எம்பி டெப்த் சென்சார் + லைட் சென்சார் கொண்டிருக்கிறது. யுனிவர்சல் டோன் (Universal Tone), ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portrait) பீச்சர்கள் வருகின்றன.

ஏஐ எரைசர் (AI Eraser) பீச்சரும் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டமானது, சர்க்கிள் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த டெக்னோ கேமன் 30எஸ் போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atoms) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் (Stereo Dual Speakers) வருகின்றன. 33W சூப்பர் சார்ஜ் (Super Charge) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரிக்கு ஹைப்பர் சார்ஜ் (Hyper Charge), ஸ்மார்ட் சார்ஜ் (Smart Charge) மற்றும் லோவ் டெம்ப் சார்ஜ் (Low Temp Charge) சப்போர்ட் வருகிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்துள்ளது. IP53 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. ப்ளூ (Blue), நெபுளா வயலெட் (Nebula Violet), செலஸ்டியல் பிளாக் (Celestial Black) மற்றும் டவுன் கோல்டு (Dawn Gold) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
இந்த போனின் குளோபல் வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். நைஜீரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்கனே வெளியாகிவிட்டது. விலையை பார்க்கையில், நைஜீரியாவில் ரூ.15,000 பட்ஜெட்டிலும், பாகிஸ்தானில் ரூ.18000 பட்ஜெட்டிலும் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் இதே விலை இருக்கும்.


Click it and Unblock the Notifications








