Home
Mobile

அடுத்த Tecno போன் ரெடி.. சோனி கேமரா.. 45W சார்ஜிங்.. 256GB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ (Tecno Camon 30S Pro) ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த போனின் விலை மற்றும் விற்பனை தேதியை வெளியிடவில்லை அந்நிறுவனம். விரைவில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ அம்சங்கள் (Tecno Camon 30S Pro Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அடுத்த Tecno போன் ரெடி.. சோனி கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீீலியோ ஜி100 சிப்செட் (octa-core MediaTek Helio G100 chipset ) வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் HIOS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத வசதியுடன் வெளிவரும் இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள இந்த போனுக்கு கிடைக்கும்.

16ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. ஷிம் சில்வர் கிரீன் (Shim Silver Green), இன்டர்ஸ்டெல்லர் கிரே (Interstellar Grey), பேர்ல் கோல்ட் (Pearl Gold) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்896 பிரைமரி சென்சார் ( Sony IMX896 primary sensor) + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியம். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

டால்பி அட்மாஸ் ( Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்களை (dual speakers) கொண்டுள்ளது இந்த டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust/Splash Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அடுத்த Tecno போன் ரெடி.. சோனி கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 20W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ரூ.20.000-க்குள் இந்த போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Camon 30S Pro specifications and colors leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X