தங்கத்த தூக்கிட்டு வாங்கடா.. ரூ.20330 போதும்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?
டெக்னோ பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடுப்படியான பட்ஜெட்டில் அல்ட்ரா பிரீமியம் வேகன் லெதர் பேனல் டிசைனில் ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், 70W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் டெக்னோ கேமன் 30 போன் வெளியாகி இருக்கிறது.
இந்திய வெளியீட்டுக்கு முன்பாக நைஜீரியாவில் டெக்னோ கேமன் 30 ப்ரோ 5ஜி (TECNO CAMON 30 Pro 5G), டெக்னோ கேமன் 30 5ஜி (TECNO CAMON 30 5G) மற்றும் டெக்னோ கேமன் 30 (TECNO CAMON 30) போன்கள் வெளியாகி இருக்கிறது. இதில் டெக்னோ கேமன் 30 போன் பட்ஜெட் பிரியர்களை ஒட்டுமொத்தமாக தட்டித்தூக்கி இருக்கிறது.

இதனால், இந்தியாவில் இருக்கும் டெக்னோ பிரியர்கள் அந்த போனின் அறிமுகத்துக்காக மரண வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். இவ்வளவு பெரிய பில்ட்-அப் கொடுக்கும் அளவுக்கு அந்த டெக்னோ போனில் என்ன இருக்கிறது, அதன் பீச்சர்கள் மற்றும் விலை எப்படி? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.
டெக்னோ கேமன் 30 அம்சங்கள் (TECNO CAMON 30 Specifications): நைட் போர்ட்ராய்டு (Night Portrait) மற்றும் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 2 எம்பி டெப்த் சென்சார் (Depth Sensor) வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording), அண்டர் வாட்டர் டாக்ர்-லைட் ஷாட் (Underwater Dark-light Shot) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
50 எம்பி ஐ-டிராக்கிங் ஆட்டோபோகஸ் ஃப்ரன்ட் கேமரா (Eye-tracking Autofocus Front Camera) வருகிறது. இந்த கேமராவில் டூயல் கலர் டெம்பரேச்சர் ஃபிளாஷ் (Dual Color Temperature Flash) வருகிறது. இந்த கேமராவில் இன்ஸ்டன்ட் பேக்கிரவுண்ட் சேஞ்ச் (Instant Background Change), வீடியோ கால் பேஸ் பியூட்டி (Video Call Face Beauty) போன்ற பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன.

ஆகவே, இந்த பட்ஜெட்டிலேயே கேமராவில் மிரளவிட்டிருக்கிறது. டிஸ்பிளேவை பார்க்கையில், 6.78 இன்ச் (2436 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) பேனல் வருகிறது. இதுவொரு அமேலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. கம்மி பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஹைய்ஓஎஸ் 14 (HiOS 14) வருகிறது.
மார்கெட்டில் புதியாக களமிறங்கிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்டிமேட் 6என்எம் (Octa Core MediaTek Helio G99 Ultimate 6nm) சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த டெக்னோ கேமன் 30 போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த டெக்னோவின் பேட்டரி சிஸ்டமும் பக்காவாகவே இருக்கிறது. 5000mAh பேட்டரியானது, 70W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) உடன் வருகிறது. கேமிங் பிரியர்களுக்கான ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் (Stereo Dual Speaker) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் இன்-டிஸ்பிளஏ ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வருகிறது. டுயல் 4ஜி எல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. ஐஸ்லாந்து பாசால்டிக் டார்க் (Iceland Basaltic Dark), யுயுனி சால்ட் ஒயிட் (Uyuni Salt White) மற்றும் சஹாரா சாண்ட் பிரவுன் (Uyuni Salt White) ஆகிய கலர்களில் வருகிறது.
இந்த டெக்னோ கேமன் 30 போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,330ஆக இருக்கிறது. இது நைஜீரியாவில் நிர்ணயிக்கப்பட்ட விலையாகும். இதே விலையில், இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில வாரங்களில் இந்த போன் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications