Home
Mobile

அலறுது மார்கெட்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 12GB ரேம்.. 70W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, ஐஆர் பிளாஸ்டர், 70W சார்ஜிங், 5000mAh பேட்டரி, 12ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் பிரீமியம் பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் டெக்னோ கேமன் 30 ப்ரோ 5ஜி (TECNO CAMON 30 Pro 5G) போன் வெளியாகியிருக்கிறது.

டெக்னோ கேமன் 30 ப்ரோ அம்சங்கள் (TECNO CAMON 30 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் 5ஜி 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 Ultimate 5G 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. ஹைஓஎஸ் 14 (HiOS 14) உள்ளது.

பட்ஜெட்ல SONY கேமரா.. 12GB ரேம்.. 70W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி!

அதேபோல மாலி ஜி610 எம்சி6 ஜிபியு (Mali G610 MC6 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் வருவதால், மிட்-ரேஞ்ச் கேமிங்களில் லாக்-ப்ரீ அனுபவம் எதிர்பார்க்கலாம். விசி லிக்விட் கூலிங் (VC Liquid Cooling) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த டெக்னோவில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

சைடு ஆக்சிஸ் கேமரா டிசைன் (Side-axis Camera Design) கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் உள்ளது.

ஓஐஎஸ் (OIS), 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) சப்போர்ட் கொண்டுள்ளது. ஏஐ பேக்கிரவுண்ட் ஈரெஸ் (AI Background Erase), போர்ட்ராய்டு வீடியோ (Portrait Video) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த கேமராவில் ஐ-டிராக்கிங் ஆட்டோ போகஸ் (Eye-tracking Autofocus) சப்போர்ட் உள்ளது.

பட்ஜெட்ல SONY கேமரா.. 12GB ரேம்.. 70W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி!

அதேபோல, டூயல் கலர் டெம்பரேச்சர் ஃபிளாஷ் (Dual Color Temperature Flash) வருகிறது. 6.78 இன்ச் (2436 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இதுவொரு வெட் ஃபிங்கர்டச் (Wet Finger Touch) சப்போர்ட் கொண்ட டிஸ்பிளே மாடலாகும்.

ஆகவே, டிஸ்பிளே பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். எக்ஸ் ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-Axis Linear Motor), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) போன்ற கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களும் இருக்கின்றன. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் (Stereo Dual Speaker) வருகின்றன.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) கொண்டிருக்கிறது. இந்த டெக்னோ கேமன் 30 ப்ரோ போனில் 70W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 5ஜி எஸ்ஏ, வை-பை 6, ப்ளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ், என்எப்சி கனெக்டிவிட்டி வருகிறது.

ஐஸ்லேண்ட் பசால்டிக் டார்க் (Iceland Basaltic Dark) மற்றும் ஆல்ப்ஸ் ஸ்னோவ் சில்வர் (Alps Snowy Silver) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.34,015ஆக இருக்கிறது. இப்போது, நைஜீரியாவில் வெளியாகி இருக்கிறது.

இதே விலையில் அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாக இருக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட் மட்டுமல்லாமல், இந்திய பிரியர்கள் விரும்பும் கேமராவிலும் பக்கா சென்சார் மற்றும் பீச்சர்கள் வருவதால், நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
TECNO CAMON 30 Pro 5G With 12GB RAM, Dimensity 8200 Ultimate Launch Soon India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X