Home
Mobile

மிரளவிட வந்துட்டாப்ல.. பட்ஜெட்ல டெக்-ஆர்ட் லெதர் பேனல்.. 12GB ரேம்.. OIS கேமரா.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, நைட்போட்டோகிராபி கேமரா, டெக்-ஆர்ட் லெதர் பேனல், 12ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும், டெக்னோ கேமன் 30 5ஜி (TECNO CAMON 30 5G) மாடலானது, இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது.

டெக்னோ கேமன் 30 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 30 5G Specifications): நேச்சர் ஃப்ளோ டெக்சர் கிளாஸ் (Nature Flow Texture Glass) பேனல் டிசைனில் ப்ரீமியம் லுக் கொடுக்கிறது. அதேபோல டெக்-ஆர்ட் லெதர் (Tech-art Leather) பேனல் கொண்ட மாடலும் வருகிறது.

பட்ஜெட்ல டெக்-ஆர்ட் லெதர் பேக்.. 12GB ரேம்.. OIS கேமரா.. 70W சார்ஜிங்!

ஸ்மார்ட் ப்ரீத்திங் லைட் (Smart Breathing Light) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. இந்த ப்ரீத்திங் லைட் மூலம் வீடியோ ரெக்கார்டிங், சார்ஜிங் ஸ்டேட்டஸ் ஆகிவற்றை தெரிந்து கொள்ளலாம். வாய்ஸ் அசிஸ்டன்ட் இன்டிகேட்டராகவும் பயன்படுத்தலாம்.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா (Depth Camera) + லைட் சென்சார் (Light Sensor) வருகிறது. நைட்போட்டோகிராபி சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, நைட் ஷூட்டிங் லார்ஜ் சென்சார் (Night Shooting Large Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது.

50 எம்பி ஏஃஎப் (AF) செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் டூயல் கலர் டெம்பரேச்சர் ஃபிளாஷ் (Dual Colour Temperature Flash) வருகிறது. இந்த டெக்னோ போனில் 6.78 இன்ச் (2436 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

பட்ஜெட்ல டெக்-ஆர்ட் லெதர் பேக்.. 12GB ரேம்.. OIS கேமரா.. 70W சார்ஜிங்!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஹைஓஎஸ் 14 (HiOS 14) வருகிறது. ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் வருகிறது.

இந்த போனில் 16 ஜிபி ரேம் (8 ஜிபி + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் (8 ஜிபி + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் (12 ஜிபி + 12 ஜிபி டைனாமிக் ரேம்) + 512 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது.

பக்கா பேட்டரி சிஸ்டம் கொண்டிருக்கிறது.70W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் (Stereo Dual Speaker) கொண்டுள்ளது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ மாடலானது, முதலில் நைஜீரியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாக இருக்கிறது.

இந்த போனின் ஆரம்ப விலையானது, ரூ.28,580 பட்ஜெட்டில் தொடங்குகிறது. இதே பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. டெக்னோ போவா சீரிஸ் போன்களை போலவே, இந்த கேமன் 30 சீரிஸ் போன்கள் புதுவித டிசைன் கொண்டிருப்பதால், நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
TECNO CAMON 30 5G With Dimensity 7020, 12GB RAM Launch Soon India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X