யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 50MP டெலிபோட்டோ.. 114 டிகிரி அல்டா வைடு.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமாக டெக்னோ கேமன் 30 5ஜி (TECNO CAMON 30 5G) மற்றும் டெக்னோ கேமன் 30 பிரீமியர் 5ஜி (TECNO CAMON 30 Premier 5G) போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் வெளியாக இருக்கின்றன.
இந்த மாதம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அமேசான் (Amazon) தளத்தில் கேமரா பீச்சர்களுடன் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. இந்த கேமரா பீச்சர்களில் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ, 50 எம்பி ஆட்டோபோகஸ் செல்பீ கேமரா, ஓஐஎஸ் (OIS) அல்ட்ரா ஸ்டெடி போன்றவை இடம்பெற்றுள்ளன.

அதேபோல 113 டிகிரி அல்டா வைடு ஆங்கிள், நைட் போட்டோகிராபி, ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portrait) போன்ற பீச்சர்களும் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் இந்த போன்கள் வெளியாக இருக்கிறது. இந்த மாடல்களின் குளோபல் வேரியண்ட் ஏற்கனவே வெளியாகிவிட்டன.
அதேபோல நைஜீரியா போன்ற நாடுகளில் அறிமுகமாகி விலை விவரங்களும் கசிந்துவிட்டன. ஆகவே, அந்த வேரியண்ட்களின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்ப்போம். ஏனென்றால், இதே பீச்சர்களே இந்திய வேரியண்ட்களிலும் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. மிட்-ரேஞ்ச பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்களை கொண்ட இந்த மாடல்களில் என்ன இருக்கிறது?
டெக்னோ கேமன் 30 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 30 5G Specifications): இந்த கேமன் மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + லைட் சென்சார் வருகிறது. நைட்போட்டோகிராபி சப்போட்டுக்காக இந்த லைட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் வருகிறது. அதேபோல 50 எம்பி ஆட்டோ போகஸ் செல்பீ கேமரா வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஹைஓஎஸ் 14 (HiOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
இந்த டெக்னோ கேமன் 30 5ஜி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் மற்றும் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 70W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது.
டெக்னோ கேமன் 30 பிரீமியர் 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 30 Premier Specifications): இந்த டெக்னோ மாடலில் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது. நைட்போட்டோகிராபி கொண்டிருக்கிறது.
3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 50 எக்ஸ் ஹைபிரிட் ஜூம் சப்போர்ட் வருகிறது. 50 எம்பி ஐ-டிராக்கிங் ஆட்டோ போகஸ் செல்பீ கேமரா வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.77 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ஹைஓஎஸ் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமெட் சிப்செட் வருகிறது. முந்தைய மாடலை போலவே 70W சார்ஜிங், 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.35,000 பட்ஜெட்டிலும், முந்தைய மாடலின் ஆரம்ப விலை ரூ.28,000 பட்ஜெட்டிலும் இருக்கிறது. இதே விலை இந்திய வேரியண்ட்களில் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








