Home
Mobile

யாருமே எதிர்பார்க்கல.. 100MP கேமரா.. 70W சார்ஜிங்.. புதிய TECNO போன்கள் இந்தியாவில் அறிமுகம்.. எந்த மாடல்?

யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் டெக்னோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது டெக்னோ கேமன் 30 5ஜி(TECNO CAMON 30 5G) மற்றும் டெக்னோ கேமன் 30 பிரீமியர் 5ஜி (TECNO CAMON 30 Premier 5G)போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு போன்களும் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், 50எம்பி செல்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன. இப்போது இந்த போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

யாருமே எதிர்பார்க்கல.. புதிய TECNO போன்கள் இந்தியாவில் அறிமுகம்..

டெக்னோ கேமன் 30 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 30 5G specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் அமோலெட் டிஸ்பிளே (LTPS AMOLED Display) கொண்டுள்ளது இந்த போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 (MediaTek Dimensity 7200) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது. பின்பு HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5000எம்ஏஎச் பேட்டரி, 70 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (70W Fast Charging) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் டெக்னோ கேமன் 30 5ஜி போன் வெளிவந்துள்ளது.

OIS ஆதரவு கொண்ட 100எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + லைட் சென்சார் என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 50எம்பி செல்பி கேமரா இதில் உள்ளது. பின்பு ஐஸ்லாந்து பசால்டிக் டார்க் (Iceland Basaltic Dark) மற்றும் யுயுனி சால்ட் ஒயிட் (Uyuni Salt White) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

டெக்னோ கேமன் 30 பிரீமியர் 5ஜி அம்சங்கள் ( TECNO CAMON 30 Premier 5G specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளது.

அதேபோல் மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது. பின்பு HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5000எம்ஏஎச் பேட்டரி, 70 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் டெக்னோ கேமன் 30 0 பிரீமியர் 5ஜி போன் வெளிவந்துள்ளது.

யாருமே எதிர்பார்க்கல.. புதிய TECNO போன்கள் இந்தியாவில் அறிமுகம்..

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் + 50எம்பி 3X டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 50எம்பி செல்பி கேமரா இதில் உள்ளது. பின்பு லாவா பிளாக், ஸ்னோவ் சில்வர் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் (MediaTek Dimensity 8200 Ultimate) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட டெக்னோ கேமன் 30 5ஜி போனின் விலை ரூ.22,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.26,999-ஆக உள்ளது. அதேபோல் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட டெக்னோ கேமன் 30 பிரீமியர் 5ஜி போனின் விலை ரூ.39,999-ஆக உள்ளது. வரும் மே 23-ம் தேதி இந்த போன்கள் அமேசானில் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த போன்களை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது.

Photo courtcy: TECNO

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO CAMON 30 5G and CAMON 30 Premier 5G launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X