மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.18,000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
மிரட்டலான டிசைன், கிரிஸ்டல் கிளியர் கேமரா மட்டுமல்லாமல், 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களை கொண்ட டெக்னோ கேமன் 20 ப்ரோ (TECNO Camon 20 Pro) போனுக்கு அமேசான் (Amazon) தளத்தில் அதிரடி தள்ளுபடி கிடைக்கிறது.
டெக்னோ கேமன் 20 ப்ரோ அம்சங்கள் (TECNO Camon 20 Pro Specifications): இந்த டெக்னோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. அதோடு ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 8050 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமிங் பிரியர்களுக்கான ஆர்ம் ஜி77 எம்சி9 ஜிபியு (ARM G77 MC9 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) வருகிறது. இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் (1080 x 2400 pixels) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும்.
இந்த டெக்னோ கேமன் 20 ப்ரோ மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் குவாட் எல்இடி (Quad LED) பிளாஷ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது.
அந்த வகையில், 64 எம்பி மெயின் கேமரா ஆர்ஜிபிடபுள்யூ (RGBW) சென்சாருடன் வருகிறது. அதோடு 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. இந்த கேமராவில், நைட் மோட் (Night Mode) மற்றும் எச்டிஆர் மோட் (HDR Mode) வருகிறது. அதேபோல 32 எம்பி அல்ட்ரா கிளியர் செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டெக்னோ கேமன் 20 ப்ரோ போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால், ஒரு நாள் முழுவதும் பேக்கப் கொடுக்கும். இதுவொரு 5ஜி போன் என்பதால், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வருகிறது.
அதேபோல யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் எப்எம் ரோடியோ (FM Radio) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த போனில் 5ஜி, 4ஜி, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், வை-பை 802 போன்ற கனெக்விட்டிகள் இருக்கின்றன. இந்த மாடலில் செரினிட்டி ப்ளூ (Serenity Blue) மற்றும் டார்க் வெல்கின் (Dark Welkin) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இந்த டெக்னோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,849ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,719ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் அமேசான் (Amazon) தளத்தில் பட்டையை கிளப்பும் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
இந்த மாடல்களை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு (SBI Bank Credit Card) பயன்படுத்தி ஆர்டர் செய்தால் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த இந்த டெக்னோ கேமன் 20 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.18,849க்கு வாங்கி கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








