திணறடிக்கும் தள்ளுபடி.. அதுவும் அறிமுகமான ஒரே மாசத்துல.. இந்த போனின் ஆஃபர் விலைய சொன்னா ஆளுக்கு 1 வாங்குவீங்க!
"இந்தியாவுல அறிமுகமான ஒரே மாசத்துல இப்படி ஒரு தள்ளுபடியா!" என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு, லேட்டஸ்ட் டெக்னோ (Tecno) ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது தள்ளுபடி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? அதன் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
அதென்ன ஸ்மார்ட்போன்? நாம் இங்கே பேசுவது மீடியாடெக் டைமன்சிட்டி 8050 சிப்செட் (MediaTek Dimensity 8050 SoC) உடன் அறிமுகமான டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி (Tecno Camon 20 Pro 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இது அறிமுக விலையை விட மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.

பழைய விலை VS புதிய விலை: நினைவூட்டும் வண்ணம் டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.19,999 க்கும், டாப் எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.21,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டன.
தற்போது, இந்த 2 ஸ்டரோஜ் ஆப்ஷன்களின் மீதும் ரூ.2000 இன்ஸ்டன்ட் பேங்க் ஆஃபர் கிடைக்கும் என்று டெக்னோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது பேங்க் கார்டுகளை பயன்படுத்தி டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி-ஐ வாங்கினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையின் கீழ், பேஸிக் வேரியண்ட்டின் விலையை ரூ.17,999 ஆகவும், 12 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலையை ரூ.19,999 ஆகவும் குறைக்க முடியும். டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி மீதான இந்த தள்ளுபடி ஜூன் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும். இன்ஸ்டன்ட் பேங்க் ஆஃபர் உடன் சேர்த்து எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், நோ-காஸ்ட் இஎம்ஐ போன்றவைகளும் கிடைக்கிறது.
எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பொறுத்தவரை, அதிகபட்சமாக ரூ.18,999 தள்ளுபடி கிடைக்கும். நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமானது ரூ.1,667 முதல் தொடங்குகிறது. நினைவூட்டும் வண்ணம், டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டெக்னோ கேமன் 20 மற்றும் டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி மாடல்களுடன் சேர்த்து அறிமுகப்படுத்தப்பட்டது.
டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி முக்கிய அம்சங்கள்: இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படியாக கொண்ட ஹைஓஎஸ் 13.0 மூலம் இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 சிப்செட்டை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 33W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications