108MP அல்ட்ரா-வைட் கேமரா: ஒன்பிளஸ் சாம்ராஜ்யத்தை தரைமட்டமாக்க போகும் புது TECNO போன்.! அறிமுகம் எப்போது?
டெக்னோ நிறுவனம் புதிய புதிய டிசைனில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் டெக்னோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது டெக்னோ நிறுவனம்.
அதாவது டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூலை 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அருமையான வடிவமைப்பு, தரமான மென்பொருள் வசதி மற்றும் அட்டகாசமான கேமரா அமைப்புடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி (TECNO CAMON 20 Premier 5G) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி போன் அறிமுகமாகும்.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் பிராசஸர் வசதியுடன் இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். சக்திவாய்ந்த பிராசஸர் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு HiOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

50எம்பி பிரைமரி கேமரா ( RGBW sensor)+ 108எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லெனஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன் எனவே இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.
குறிப்பாக ஒன்பிளஸ் போன்களை விட தரமான கேமரா வசதியுடன் இந்த டெக்னோ போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், FM ரேடியோ உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். மேலும் செரினிட்டி ப்ளூ மற்றும் டார்க் வெல்கின் நிறங்களில் இந்த புதிய டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் அமேசானில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








