Mondrian எடிஷன் அறிமுகம் செய்த Tecno: 37 நாள் பேட்டரி ஆயுள் உடன் பட்ஜெட் விலை போன்!

|

Tecno Camon 19 Pro Mondrian எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி RGBW+ சென்சார் உட்பட டிரிபிள் பின்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

சிறந்த பின்புற கேமரா

சிறந்த பின்புற கேமரா

டெக்னோ கேமன் 19 ப்ரோ மாண்ட்ரியன் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிறத்தை மாற்றும் பின்புற வடிவமைப்புடன் நிறுவனத்தின் தரப்பில் வெளியான முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

இந்த ஸ்மார்ட்போனானது 120Hz ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 SoC மூலம் இயக்கப்படுகிறது.

37 நாட்கள் வரை காத்திருப்பு நேரம்

37 நாட்கள் வரை காத்திருப்பு நேரம்

Tecno Camon 19 Pro Mondrian எடிஷன் ஸ்மார்ட்போனானது 64-மெகாபிக்சல் RGBW+ (G+P) முதன்மை சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5ஜிபி வரை மெய்நிகர் ரேம் விரிவாக்கம் செய்ய முடியும். டெக்னோ கேமன் 19 ப்ரோ மாண்ட்ரியன் எடிஷன் ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 37 நாட்கள் வரை காத்திருப்பு நேரம் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tecno Camon 19 Pro Mondrian எடிஷன் விலை

Tecno Camon 19 Pro Mondrian எடிஷன் விலை

Tecno Camon 19 Pro Mondrian எடிஷன் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.17,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனை செப்டம்பர் 22 முதல் அமேசான் மூலமாக முன்பதிவு செய்யலாம்.

SBI வங்கி கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tecno Camon 19 Pro Mondrian எடிஷன் அம்சங்கள்

Tecno Camon 19 Pro Mondrian எடிஷன் அம்சங்கள்

Tecno Camon 19 Pro Mondrian எடிஷன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான HiOS 8.6 மூலம் இயங்குகிறது.

6.8 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 94.26 டிஸ்ப்ளே டூ பாடி விகிதம் இருக்கிறது.

இந்த டிஸ்ப்ளேவின் காட்சி Widevine L1 ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இந்த அம்சம் OTT உள்ளடக்கங்களை 1080 பிக்சல்கள் தெளிவுத்திறனுடன் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. இந்த புதிய Tecno போன் ஆனது MediaTek Helio G96 SoC மூலம் இயக்கப்படுகிறது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

Tecno Camon 19 Pro Mondrian எடிஷன் ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

64-மெகாபிக்சல் RGBW+ (G+P) முதன்மை சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் என டிரிபிள் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

32 எம்பி செல்பி கேமரா

இந்த ரியர் கேமரா ஆனது பல்வேறு ஆதரவுகளை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இதன்மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

வெவ்வேறு வண்ண காட்சி

வெவ்வேறு வண்ண காட்சி

இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஆனது மல்டி கலர் பேக்ரவுண்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை சூரிய ஒளியில் காட்டும் போது வெவ்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கிறது.

37 நாட்கள் வரை காத்திருப்பு நேரம்

37 நாட்கள் வரை காத்திருப்பு நேரம்

டெக்னோ கேமன் 19 ப்ரோ மாண்டோரியன் எடிஷன் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

124 மணி நேர மியூசிக் ப்ளேபேக் நேரத்தையும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 37 நாட்கள் வரை காத்திருப்பு நேரத்தையும் வழங்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

13 நிமிடத்தில் இந்த ஸ்மார்ட்போனை பூஜ்ஜியத்தில் இருந்து 30 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
Tecno Camon 19 Pro Mondrian Edition Launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X