48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான Tecno Camon 18T ஸ்மார்ட்போன் அறிமுகம்
கடந்த திங்களன்று பாகிஸ்தானில் டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செராமிக் ஒயிட், டஸ்க் கிரே மற்றும் ஐரிஸ் பர்ப்பிள் நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட இ-காமர்ஸ் இணையதளமான Daraz இல் இந்த டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.11,900 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போன் மாடல் 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,460 பிக்சல் தீர்மானம், 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், ஹோல் பஞ்ச் கட்அவுட் வடிவமைப்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் HiOS 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்;கும் என்றே டூயல் ஃபிளாஷ் கொண்ட 48 மெகாபிக்சல் கேமரா இவற்றுள் அடக்கம். எனவே இந்த சாதனத்தின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ், FM ரேடியோ, OTG, ஜி-சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார், AI வாய்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டெக்னோ கேமன் 18டி ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications