அசத்தலான டெக்னோ கேமன் 18ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!

|

டெக்னோ நிறுவனம் புதிய டெக்னோ கேமன் 18ஐ ஸ்மார்ட்போன் மாடலை நைஜீரியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான அமசங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னோ கேமன் 18ஐ

டெக்னோ கேமன் 18ஐ ஸ்மார்ட்போன் மாடல் சில்வர் மற்றும் கிரீன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம்
மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட டெக்னோ கேமன் 18ஐ மாடலின் விலை NGN 84,500 (இந்திய மதிப்பில் ரூ.15,400) ஆக உள்ளது.இப்போது டெக்னோ கேமன் 18ஐ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

டெக்னோ கேமன் 18ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720x1,640பிக்சல் தீர்மானம், 20:5:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆப்பிள் iPhone XR சாதனத்தை இலவசமாக வழங்குகிறது.. ஆனால் இது நடந்தால் மட்டும் தான் கிடைக்கும்..ஆப்பிள் iPhone XR சாதனத்தை இலவசமாக வழங்குகிறது.. ஆனால் இது நடந்தால் மட்டும் தான் கிடைக்கும்..

18ஐ ஸ்மார்ட்போனில்

இந்த டெக்னோ கேமன் 18ஐ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசததி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் வசதி ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 2.2 மில்லியன் யூசர்களின் அக்கவுண்ட்களை நீக்கிய வாட்ஸ்அப் நிறுவனம்.! காரணம் என்ன?இந்தியாவில் 2.2 மில்லியன் யூசர்களின் அக்கவுண்ட்களை நீக்கிய வாட்ஸ்அப் நிறுவனம்.! காரணம் என்ன?

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

டெக்னோ கேமன் 18ஐ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டெக்னோ கேமன் 18ஐ சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சலுகை விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்க இறுதி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..சலுகை விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்க இறுதி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..

ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம்

டெக்னோ கேமன் 18ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + QVGA இரண்டாம் நிலை கேமரா + ஏஐ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த டெக்னோ கேமன் 18ஐ மாடல். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அவ்ளோ சந்தோஷம் வேணாம்- பணம் கொடுக்கல மொபைல் லாக்: ஜியோபோன் நெக்ஸ்ட்டில் இருக்கும் டிவைஸ் லாக் அம்சம்!அவ்ளோ சந்தோஷம் வேணாம்- பணம் கொடுக்கல மொபைல் லாக்: ஜியோபோன் நெக்ஸ்ட்டில் இருக்கும் டிவைஸ் லாக் அம்சம்!

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன் மாடல்.

பணம் டெபாசிட் செய்ய கட்டணம்.. சிலிண்டர் பதிவு மற்றும் ரயில் நேரங்களின் திடீர் மாற்றம்.. என்ன சார் இதெல்லாம்?பணம் டெபாசிட் செய்ய கட்டணம்.. சிலிண்டர் பதிவு மற்றும் ரயில் நேரங்களின் திடீர் மாற்றம்.. என்ன சார் இதெல்லாம்?

ஸ்மார்ட்போனில் 4ஜி

டெக்னோ கேமன் 18ஐ ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ ஏ/ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. இதுதவிர பல்வேறு சென்சார்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டெக்னோ கேமன் 18ஐ மாடல். அதேபோல் டெக்னோ நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 டெக்னோ ஸ்பார்க் 8

டெக்னோ ஸ்பார்க் 8

மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் 4ஜிபி ரேம் வசதியுடன் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது. அதாவதுஏற்கனவே 2ஜிபி/3ஜிபி ரேம் உடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

 64ஜிபி மெமரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட டெக்னோ ஸ்பார்க் 8 மாடலை ரூ.10,999-விலையில் வாங்க முடியும். பின்பு 2ஜிபி ரேம் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 8 மாடலை ரூ.7,999-விலையிலும், 3ஜிபி ரேம் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 8 மாடலை ரூ.9,299-விலையிலும் வாங்க முடியும். டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியடன் வெளிவந்துள்ளது. பின்பு 720x1,612
பிக்சல் தீர்மானம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ்,20:15:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் மாட

டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனம் கேமிங்கிற்கான HyperEngine தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு AI பியூட்டி, ஸ்மைல் ஷாட், AI போர்ட்ரெய்ட், HDR, AR ஷாட், ஃபில்டர்கள், டைம் லேப்ஸ், பனோரமா மற்றும் ஸ்லோ மோஷன் உள்ளிட்ட கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது
டெக்னோ ஸ்பார்க் 8

டெக்னோ ஸ்பார்க் 8

டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் அம்பியன்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் என பல சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 8.

Best Mobiles in India

English summary
Tecno Camon 18i Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X