120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் டெக்னோ கேமன் 18, கேமன் 18பி அறிமுகம்!

|

டெக்னோ கேமன் 18 மற்றும் கேமன் 18பி சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு சாதனங்களும் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கிறது. டெக்னோ கேமன் 18 ப்ரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோ புதிய ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். ஐரிஸ் பர்பிள், ட்ஸ்க் கிரே மற்றும் செராமிக் வெள்ளை வண்ண விருப்பங்களோடு வருகிறது.

டெக்னோ கேமன் 18 மற்றும் கேமன் 18 பி

டெக்னோ கேமன் 18 மற்றும் கேமன் 18 பி

டெக்னோ கேமன் 18 மற்றும் கேமன் 18 பி விவரக்குறிப்புகள்., கேமன் 18 மற்றும் கேமன் 18பி ஸ்மார்ட்போன்கள் 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேக்களுடன் வருகிறது. இது 1,080 x 2,460 பிக்சல் தீர்மானத்தோடு வருகிறது. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு கொண்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. முன்புறத்தில் உள்ள பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு வருகிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி

மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி

கேமன் 18 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியோடு இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இருக்கிறது. கேமன் 18பி ஆனது ஹீலியோ ஜி96 செயலியோடு வருகிறது. இதன் ப்ரீமியர் மாடல் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. அதேபோல் கேமன் 18 சாதனமானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது.

மூன்று பின்புற கேமரா

மூன்று பின்புற கேமரா

இரண்டு ஸ்மார்ட்போன்களும் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. கேமன் 18 சாதனத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் உடன் வருகிறது. கேமன் 18பி ஸ்மார்ட்போனானது 13 எம்பி போர்ட்ரெய்ட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை ஆழ சென்சார் வசதியோடு வருகிறது. மேலும் இந்த சாதனமானது 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உடன் வருகிறது. இரண்டு சாதனங்களில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான எச்ஐஓஎஸ் 8.0 உடன் அனுப்பப்படுகின்றன. கூடுதல் பாதுகாப்பு வசதிக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இணைப்பு விருப்பங்களாக இதில் இரட்டை சிம், 4ஜி வோல்ட், வைஃபை 5, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி-சி இணைப்பு ஆதரவோடு வருகிறது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

டெக்னோ கேமன் 18 ப்ரீமியமர் ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் வருகிறது. வீடியோ படப்பிடிப்புக்காக ஜிம்பால் ஸ்டேபிலைசேஷன் உடன் வருகிறது. இது முன்பக்கத்தில் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. அமோலெட் பேனல் வசதியோடு ஹீலியோ ஜி-சீரிஸ் சிப்செட்டை கொண்டிருக்கிறது.

அற்புதமான ஜியோ எக்ஸ்க்ளூசிவ் சலுகை

அற்புதமான ஜியோ எக்ஸ்க்ளூசிவ் சலுகை

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. டெக்னோ அதன் ஸ்பார்க் சீரிஸ் தொடரில் ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போனை அற்புதமான ஜியோ எக்ஸ்க்ளூசிவ் சலுகைகளுடன் அறிவிக்கப்பட்டது. பண்டிகை காலத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. ஜியோ எக்ஸ்க்ளூசிவ் சலுகையின் ஒரு பகுதியாக, நுகர்வோர் அதிவேக டேட்டா இணைப்பை அனுபவிக்க முடியும். இந்த சலுகையானது புதிய மற்றும் தற்போதைய ஜியோ சந்தாதாரர்கள் இருவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ எக்ஸ் க்ளூசிவ் சலுகையாக ஜியோ பயனர்கள் ரூ.584 ஆதரவை உடனடியாக அனுபவிக்க முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tecno Camon 18, Camon 18P Smartphone Launched with 120Hz Display, 5000 mAh Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X