மீண்டும் ஒரு பிரமாதம்: தரமான அம்சம் நியாயமான விலையில் டெக்னோ கேமன் 17!
டெக்னோ நிறுவனம் சமீபத்தில் ஸ்பார்க் தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. டெக்னோ நிறுவனம் சமீபத்தில் ஸ்பார்க் தொடர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது பிராண்ட் டெக்னோ கேமன் ஸ்மார்ட்போன் நிலையான மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டெக்னோ கேமன் 16 தொடரின் வாரிசாக இருக்கும். டெக்னோ கேமன் 17 ஸ்மார்ட்போனானது மீடியோ டெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி செயலி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 48 எம்பி பிரதான முதன்மை கேமரா உள்ளிட்ட அம்சங்களோடு வருகிறது.

டெக்னோ கேமன் 17 ஸ்மார்ட்போன்
டெக்னோ கேமன் 17 ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஃப்ரோஸ்ட் ஸ்லிவர், டீப் சீ மற்றும் டிராங்கில் க்ரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. டெக்னோ கேமன் 17 ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு கொண்ட வேரியண்ட் விலை ரூ.15,750 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.22,799 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

டெக்னோ கேமன் 17 அம்சங்கள்
டெக்னோ கேமன் 17 ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.55 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்திற்கு பதிலாக 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதன் கேமரா சென்சாருக்கும் அதே பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்பு இருககிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 இயக்க முறை
டெக்னோ கேமன் 17 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 இயக்க முறைமையின் ஹியோஸ் தனிப்பயன் ஸ்கை வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் சக்தி வாய்ந்த மூன்று கேமரா அம்சங்கள் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி முதன்மை கேமரா, 16 எம்பி புற ஊதா இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமராவோடு வருகிறது. அதுமட்டுமின்றி செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆதரவோடு வருகிறது.

இந்தியாவில் எப்போது அறிமுகம்
டெக்னோ கேமன் 17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இந்த பிராண்ட் அறிமுகம் செய்த ஸ்பார்க் தொடர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் இருந்ததால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல் நியாயமான விலையில் நிறுவனம் டெக்னோ கேமன் 17 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது எனவே இதற்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications