48எம்பி செல்பீ கேமராவுடன் டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
டெக்னோ நிறுவனம் நைஜீரிய சந்தையில் தனது புதிய டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 48எம்பி செல்பீ கேமரா, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் சிறந்த மென்பொருள் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.8-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.8-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 × 2460 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் வசதி
இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன். இதுதவிர ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 1256 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் செல்பீகளுக்கும்,
வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 48எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

5000 எம்ஏஎச் பேட்டரி
டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.22,600-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications