நாளை விற்பனைக்கு வரும் டெக்னோ கேமன் 17 மற்றும் டெக்னோ கேமன் 17 ப்ரோ மாடல்கள்.!

|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெக்னோ கேமன் 17 மற்றும் டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நாளை விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக நாளை நடைபெறும் அமேசான் பிரைம் தின விற்பனையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் குறிப்பிட்ட சலுகைகள்
கிடைக்கும்.

நாளை விற்பனைக்கு வரும் டெக்னோ கேமன் 17 மற்றும் டெக்னோ கேமன் 17 ப்ரோ.!

மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸமார்ட்போனை வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த பிராண்ட் டெக்னோ கேமன் 17 ப்ரோவுடன் டெக்னோ இயர் பட்ஸ் 1-ஐயும் இலவசமாக வழங்குகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட டெக்னோ கேமன் 17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. மேலும் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி டெக்னோ கேமன் 17 ஸமார்ட்போனை வாங்கினால் 10% உடனடி
தள்ளுபடி கிடைக்கும்.

Arctic Down நிறத்தில் வெளிவந்துள்ளது டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ஃப்ரோஸ்ட் சில்வர், ஸ்ப்ரூஸ் கிரீன் மற்றும் மேக்னட் பிளாக் நிறங்களில் வெளிவந்துள்ளது டெக்னோ கேமன் 17 ஸ்மார்ட்போன். இப்போது இந்த இரண்டு சாதனங்களின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாக பார்ப்போம்.

டெக்னோ கேமன் 17 சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே: 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
500 நிட்ஸ் ப்ரைட்னஸ்
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ ஜி85
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
HiOS v7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
ரியர் கேமரா: 64எம்பி மெயின் சென்சார் + மூன்று 2எம்பி சென்சார்கள்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
4ஜி எல்டிஇ, வைஃபை,
புளூடூத் வி 5
ஜி.பி.எஸ்

டெக்னோ கேமன் 17 ப்ரோ சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே: 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
500 நிட்ஸ் ப்ரைட்னஸ்
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ ஜி95
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி
HiOS v7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
ரியர் கேமரா: 64எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 48எம்பி செல்பீ கேமரா
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
4ஜி எல்டிஇ, வைஃபை,
புளூடூத் வி 5
ஜி.பி.எஸ்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tecno Camon 17, Camon 17 Pro First Sale Starts Tomorrow via Amazon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X