Home
Mobile

Tecno Camon 16 சீரிஸ் போன்கள் டூயல் செல்ஃபீ கேமராவுடன் விரைவில் அறிமுகம்!

செப்டம்பர் 3 ஆம் தேதி டெக்னோ காமன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஏ.ஆர் நிகழ்வு வழியாக அறிமுகப்படுத்தவுள்ளது. ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வு இரவு 10.30 மணிக்கு யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெக்னோ கேமன் 16 சீரிஸ்

டெக்னோ கேமன் 16 சீரிஸ்

டெக்னோ கேமன் 16 சீரிஸ், கேமன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான கேமன் 15 ப்ரோ மற்றும் கேமன் 15 ஸ்மார்ட்போன்களின் வாரிசாக இருக்கும். இந்த இரண்டு சாதனங்களும் இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டன. கேமன் 16 தொடரின் அறிமுகத்திற்காக டெக்னோ இரண்டு டீஸர் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. நிறுவனம் #MoreThanACameraPhone என்ற ஹேஷ்டேக்குடன் புதிய போனை பற்றி ட்வீட் செய்து வருகிறது.

வடிவமைப்பு

சாதனத்தின் முன்பக்க விளம்பரத்தில் மேல்-இடது மூலையில் இரட்டை பஞ்ச்-ஹோலுடன் முழுத்திரை டிஸ்பிளேயுடன் கேமன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்னோ ஸ்மார்ட்போனின் முழு திரை வடிவமைப்புடன் தீவிரமான மெல்லிய பெசல்கள் உடன் வருகிறது. டெக்னோ பகிர்ந்த டீஸரின் கூற்றுப்படி, இது 33W ஃபிளாஷ் சார்ஜ்ர் உடன் வருகிறது.

காமன் 15

வரவிருக்கும் டெக்னோ ஸ்மார்ட்போன் 6.9' இன்ச் டூயல் டாட்-இன் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இது ஒரு முதன்மை 64 மெகாபிக்சல் சென்சார் கேமராவுடன், குவாட்-கேமரா அமைப்புடன் வரும் என்று அறிவித்துள்ளது. இது டெக்னோ காமன் 15 இன் பிரதான கேமராவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, இது 48 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெக்னோ

மீதமுள்ள விவரக்குறிப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்தத் தொடர் டெக்னோவின் முக்கிய சந்தைகளான நைஜீரியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விலை விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Tecno Camon 16 series with 64MP quad camera to launch on September 3 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X