64எம்பி ரியர் கேமராவுடன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
டெக்னோ மொபைல் நிறுவனத்தின் புதிய டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்பபோம்.

டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் மாடல் 6.85-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2460x1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G90T பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 800MHz Mali-G76 3EEMC4 GPU மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128 ஜிபி (UFS 2.1) மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 48எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த
ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது இந்த சாதனத்தின் கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

டெக்னோ கமோன் 16 பிரீமியர் சாதனத்தில் 4500 எம்ஏஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கிளேசியர் சில்வர் நிறத்தில் டெக்னோ கமோன் 16 பிரீமியர் சாதனம் கிடைக்கும். பின்பு ரூ. 16,999-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications