Home
Mobile

32எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் டெக்னோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!

டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ கமோன் 15 மற்றும் டெக்கோ கமோன் 15 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த டெக்கோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் ரூ.3,499-மதிப்புள்ள வயர்லெஸ் ஸ்பீக்கர் இலவசமாக கிடைக்கும் என தி மொபைல் இந்தியன் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25-ம் தேதி

பிப்ரவரி 25-ம் தேதி

மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வரும் பிப்ரவரி 25-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனங்களின் விலை மற்றும் முழுவிவரங்களையும்பார்ப்போம்.

 டெக்கோ கமோன் 15 ப்ரோ டிஸ்பிளே

டெக்கோ கமோன் 15 ப்ரோ டிஸ்பிளே

டெக்கோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 2340 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.

 டெக்கோ கமோன் 15 ப்ரோ சிப்செட் வசதி

டெக்கோ கமோன் 15 ப்ரோ சிப்செட் வசதி

டெக்கோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி பேட்டரியை கொண்டுள்ளது டெக்கோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன்.

 டெக்கோ கமோன் 15 ப்ரோ கேமரா வசதி

டெக்கோ கமோன் 15 ப்ரோ கேமரா வசதி

டெக்கோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + அல்ட்ரா நைட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 32எம்பி பாப்-அப் செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்புஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

டெக்கோ கமோன் 15 டிஸ்பிளே

டெக்கோ கமோன் 15 டிஸ்பிளே

டெக்கோ கமோன் 15 ஸ்மார்ட்போனில் 6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

டெக்கோ கமோன் 15 சிப்செட்

டெக்கோ கமோன் 15 சிப்செட்

டெக்கோ கமோன் 15 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகள் அடக்கம்

டெக்கோ கமோன் 15 கேமரா வசதி

டெக்கோ கமோன் 15 கேமரா வசதி

டெக்கோ கமோன் 15 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் + அல்ட்ரா நைட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ
கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

டெக்கோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.
டெக்கோ கமோன் 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Camon 15 Pro with pop-up selfie camera, Camon 15 launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X