6000எம்ஏஎச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
டெக்னோ நிறுவனம் எப்போதும் பட்ஜெட் விலையில் அருமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும், அதன்படி இன்று அந்நிறுவனம் புதிய ஸ்பார்க் பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவலைப் பார்ப்போம்.

டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.35-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1548 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்பிளே பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12என்.எம் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டெக்னோ ஸ்பார்க் பவர் சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன இந்தஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதன்பின்பு டான் புளூ மற்றும் ஆல்ஃபென் கோல்டு நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி மேக்ரோ லென்ஸ்என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.பின்பு 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத் 5 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் டிசம்பர் 1-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








