மிரட்டலான நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட் போன் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?
எச்.எம்.டி க்ளோபல் நிறுவனம் தனது அடுத்த புது ஸ்மார்ட் போன் பற்றிய டீஸர் விடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
எச்.எம்.டி க்ளோபல் நிறுவனம் தனது அடுத்த புது ஸ்மார்ட் போன் பற்றிய டீஸர் விடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த டீஸரின் படி அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட் போன், நோக்கியா எக்ஸ்7 என்ற பெயரில் வெளியிடப்படுமென்ற செய்திகள் கசிந்துள்ளது.

நோக்கியா எக்ஸ்7
நோக்கியா நிறுவனம் வரும் நவம்பர் மாதம் 28 தேதி இந்தியாவில் நடைபெறவுள்ள தனது நோக்கியா நிகழ்ச்சியில் புதிய நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நாட்ச் டிஸ்பிளே
நோக்கியா நிறுவனம் அண்மையில் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், புதிய நாட்ச் டிஸ்பிளேயுடன் கூடிய ஸ்மார்ட்போன் மாடலை தனது ரசிகர்களுக்காகப் பகிர்ந்துள்ளது.

நவம்பர் 28
காட்ஜெட் செய்தி ஊடகங்கள் கொடுத்துள்ள தகவலின் படி வரும் 28 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நோக்கியா 8.1 ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெறும் ரூ.23,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா டுவீட்
நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள தனது புதிய டுவீட்டில் நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட் போன், டார்க் ரெட் மற்றும் ரோஸி கலரில் அறிமுகம் செய்யப்படுமென்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட் போன் சென்ற மாதம் சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா எக்ஸ்7 விபரக்குறிப்பு:
- 6.8' இன்ச் கொண்ட 1080p பிக்சல் ரெசொலூஷன் உடைய பியூர் எச்.டி டிஸ்பிளே
- ஸ்னாப் டிராகன் 710 பிராஸெஸ்ஸர்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 12 மெகா பிக்சல் உடன் கூடிய 13 மெகா பிக்சல் கொண்ட டூயல் பின்பக்க கேமரா
- 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஏ.ஐ சேவை
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்
- விரைவில் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதள அப்டேட்
- யூ.எஸ்.பி-சி போர்ட்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி
விலை : ரூ.23,999


Click it and Unblock the Notifications