Home
Mobile

அசத்தலான அம்சங்களுடன் டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

டிசிஎல் நிறுவனம் டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த வடிவமைப்புடன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. தற்போது இந்த சாதனம் அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனின்
அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்

டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.81-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,460 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில்

புதிய டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.

ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம்

டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டுமே வெளிவந்துள்ளது.

ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம்

டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்போன் மாடல்.

டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன்

டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.

5எம்எம் ஆடியோ ஜாக்,

யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக், புளூடூத் வி5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை $258 (இந்திய மதிப்பில் ரூ.20,000) ஆக உள்ளது.

மேலும் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. விரைவில் டிசிஎல் நிறுவனம் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
TCL Stylus 5G With Dimensity 700 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X