இனி டிவி மட்டுமில்ல: டிசிஎல் அறிமுகம் செய்த மலிவு விலை ஸ்மார்ட்போன்: சிறப்பான லுக்!

|

டிசிஎல் நிறுவனம் என்று குறிப்பிட்டதும் நினைவுக்கு வருவது ஸ்மார்ட்டிவி தான். காரணம் டிசிஎல் நிறுவனம் குறைந்த விலையில் பல இன்ச் அளவுகளில் ஸ்மார்ட்டிவிகளை குறைந்த விலை அறிமுகம் செய்து வருகிறது. டிசிஎல் நிறுவனத்தின் புதிய டிசிஎல் எல்10 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 128 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் 4000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது.

டிசிஎல் இடைநிலை ஸ்மார்ட்போன்

டிசிஎல் இடைநிலை ஸ்மார்ட்போன்

சீன தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎல் இடைநிலை ஸ்மார்ட்போன்களின் போர்ட்ஃபோலியோக்களை விரிவுப்படுத்தும் விதமாக பிரேசிலில் டிசிஎல் எல் 10 ப்ரோ சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.18,300 ஆக இருக்கிறது. இதன் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.22 இன்ச் டிஸ்ப்ளே அளவுடன், 13 எம்பி கேமரா உட்பட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனானது யூனிசோக் எஸ்சி 9863 ஏ சிப்செட் வசதியோடு, 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஆதரவுடன் வருகிறது. மேலும் இது எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

வாட்டர் டிராப் நாட்ச்

வாட்டர் டிராப் நாட்ச்

இந்த டிசிஎல் எல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்போடு வருகிறது. இதன் பின்புறத்தில் பாதுகாப்பு அம்சத்துக்கு என கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இதில் கேமரா செங்குத்து வடிவத்தில் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

டிசிஎல் எல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 720x1600 பிக்சல்கள் எல்சிடி டிஸ்ப்ளே வடிவமைப்போடு 19:9 என்ற விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இதன் முன்புறத்தில் செல்பி வசதிக்கென 5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புற கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், இது 13 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ் என மூன்று பின்புற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

டிசிஎல் எல் 10 ப்ரோ யூனிசாக் எஸ்சி 9863 ஏ செயலி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு குறித்த தகவல் எதுவும் இல்லை. இதன் இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஹெட்போன் ஜேக் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகிய ஆதரவுகளோடு வருகிறது. பாக்கெட் பிஞ்ச் தகவலை பொறுத்தவரை டிசிஎல் எல் 10 ப்ரோ ஆனது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.18,300 என இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்

TCL நிறுவனத்திற்குச் சொந்தமான அல்காடெல் பிராண்ட் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. அல்காடெல் 1 (2021) மற்றும் அல்காடெல் 1 எல் ப்ரோ என்கிற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.

அல்காடெல் 1 (2021) சிறப்பம்சம்

அல்காடெல் 1 (2021) சிறப்பம்சம்

இந்த ஸ்மார்ட்போனானது 5 இன்ச் கொண்ட FWVGA பிளஸ் உடன் கூடிய 480 x 960 பிக்சல் மற்றும் 18: 9 திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது குவாட் கோர் மீடியாடெக் MT6739 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் வசதியோடு வருகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ் ஆதரவு இருக்கிறது. மேலும் 5 மெகாபிக்சல் பின்பக்க சென்சார், 2 மெகாபிக்சல் முன்பக்க செல்பி சென்சார் உடன் வருகிறது. இதன் இணைப்பு ஆதரவுகளுக்கு வைஃபை, 4ஜி,
ப்ளூடூத் v 4.2, ஜிபிஎஸ்
மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் மற்றும்
2,000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது.

ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) ஆதரவு

அல்காடெல் 1 எல் ப்ரோ சிறப்பம்சம் குறித்து பார்க்கையில், இது 6.1 இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720p+ பிக்சல் மற்றும் 19.5: 9 திரை விகிதம் கொண்ட டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது பெயரிடப்படாத ஆக்டா கோர் சிப்செட் வசதியோடு வருகிறது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்டிருக்கிறது. இது மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 128 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ் வசதியை நீட்டிக்க அனுமதிக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) ஆதரவும் உள்ளது. இதில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இது 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் கேமராவுடன் வருகிறது.

AI அக்வா அல்லது வல்கனோ பிளாக்

AI அக்வா அல்லது வல்கனோ பிளாக்

அல்காடெல் 1 (2021) ஆனது €59 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ.5,227 என்ற விலையின் கீழ் அறிமுகமாகியது. இது AI அக்வா அல்லது வல்கனோ பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அல்காடெல் 1 எல் ப்ரோ சாதனமானது $127டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 9426 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Pic Courtesy: Social Media

Best Mobiles in India

English summary
TCL introduced its TCL L10 PRo With HD+ LCD Screen, Android 10 and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X