Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 50MP கேமரா.. 5200mAh பேட்டரி.. வருகிறது புதிய TCL ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

டிசிஎல் (TCL) நிறுவனம் தனது புதிய டிசிஎல் 60 அல்ட்ரா என்எக்ஸ்டிபேப்பர் (TCL 60 Ultra Nxtpaper) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது தற்போது கொலம்பிய இ-காமர்ஸ் தளமான Alkosto.com இல் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய டிசிஎல் போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

டிசிஎல் 60 அல்ட்ரா என்எக்ஸ்டிபேப்பர் அம்சங்கள் (TCL 60 Ultra Nxtpaper Specifications): 7.2-இன்ச் எச்டி (HD) எல்சிடி ஐபிஎஸ் (LCD IPS) டிஸ்பிளே வசதியுடன் டிசிஎல் 60 அல்ட்ரா என்எக்ஸ்டிபேப்பர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080×2340 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட்டே அதிர போகுது.. வருகிறது புதிய TCL ஸ்மார்ட்போன்..

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset) உடன் டிசிஎல் 60 அல்ட்ரா என்எக்ஸ்டிபேப்பர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ (telephoto) லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது டிசிஎல் 60 அல்ட்ரா என்எக்ஸ்டிபேப்பர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

3x ஆப்டிகல் ஜூம் (3x optical zoom) ஆதரவைக் கொண்டுள்ளது டிசிஎல் 60 அல்ட்ரா என்எக்ஸ்டிபேப்பர் போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய டிசிஎல் போன் அறிமுகமாகும்.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டு வெளிவரும் டிசிஎல் 60 அல்ட்ரா என்எக்ஸ்டிபேப்பர் ஸ்மார்ட்போன். பின்பு NFC, புளூடூத் (Bluetooth), வைஃபை (Wi-Fi), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளது.

5200mAh பேட்டரி உடன் டிசிஎல் 60 அல்ட்ரா என்எக்ஸ்டிபேப்பர் போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் டிசிஎல் 60 அல்ட்ரா என்எக்ஸ்டிபேப்பர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த டிசிஎல் 60 அல்ட்ரா என்எக்ஸ்டிபேப்பர் ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL 60 Ultra Nxtpaper specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X