Home
Mobile

அசரவைக்கும் டிசிஎல்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. 6.5-இன்ச் டிஸ்பிளே.. புதிய போன் அறிமுகம்.. எந்த மாடல்?

டிசிஎல் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு டிவிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவும் அதிக ஆர்வம் காட்டுகிறது டிசிஎல் நிறுவனம்.

அதன்படி தற்போது டிசிஎல் நிறுவனம் புதிய டிசிஎல் 505 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பெரிய டிஸ்பிளே, 5010எம்ஏஎச் பேட்டரி, டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் டிசிஎல் 505 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் முக்கிய அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

அசரவைக்கும் டிசிஎல்.. 50MP கேமரா.. புதிய போன் அறிமுகம்.. எந்த மாடல்?

டிசிஎல் 505 ஸ்மார்ட்போன் அம்சங்கள் (TCL 505 specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த டிசிஎல் 505 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் (400 nits brightness) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் டிசிஎல் 505 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டிசிஎல் 505 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டிசிஎல் 505 ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சக்திவாய்ந்த ஹீலியோ ஜி36 சிப்செட் (Helio G36 chipset) வசதியுடன் இந்த டிசிஎல் 505 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிக்கு தகுந்தபடி பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த டிசிஎல் போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

அசரவைக்கும் டிசிஎல்.. 50MP கேமரா.. புதிய போன் அறிமுகம்.. எந்த மாடல்?

5010எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் டிசிஎல் 505 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டிசிஎல் 505 ஸ்மார்ட்போன்.

டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த டிசிஎல் 505 ஸ்மார்ட்போன். மேலும் ஓஷன் ப்ளூ (Ocean Blue) மற்றும் ஸ்பேஸ் கிரே (Space Grey) நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தற்போது உலக சந்தையில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த டிசிஎல் 505 போனின் விலை குறித்த தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். விரைவில் இந்த போனின் விலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL 505 smartphone with 5010mAh battery launched: check specifications, price availability
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X