புதிய டிசிஎல் 20Y ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
டிசிஎல் நிறுவனம் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளில் புதிய டிசிஎல் 20Y ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனம் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது டிசிஎல் 20Y ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட டிசிஎல் 20Y ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.10,900-ஆக உள்ளது. மேலும் Twilight Blue மற்றும் Twilight Black நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
டிசிஎல் 20Y ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 2.5D glass பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த புதிய டிசிஎல் 20Y ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஏ25 ஆக்டோ-கோர் (MTK6762D) சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

டிசிஎல் 20Y ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர மல்டி-ஃப்ரேம், ஃபேஸ் டிராக்கிங், எச்டிஆர், AI scene detection 2.0, கூகிள் லென்ஸ், ப்ரோ மோட், லைட் டிரெயில், EIS வீடியோ ஸ்டெபிலைசேஷன், லோ லைட் வீடியோ மற்றும் ஸ்டாப் மோஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த டிசிஎல் 20Y ஸ்மார்ட்போன்.
டிசிஎல் 20Y ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய டிசிஎல் 20Y ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 4ஜி,ப்ளூடூத் வி5, கைரேகை சென்சார் கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 194 கிராம் எடை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
குறிப்பாக டிசிஎல் நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது. விரைவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு டிசிஎல் நிறுவனம் டிசிஎல் எல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக டிசிஎல் எல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 720x1600 பிக்சல்கள் எல்சிடி டிஸ்ப்ளே வடிவமைப்போடு 19:9 என்ற விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இதன் முன்புறத்தில் செல்பி வசதிக்கென 5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புற கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், இது 13 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ் என மூன்று பின்புற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. டிசிஎல் எல் 10 ப்ரோ யூனிசாக் எஸ்சி 9863 ஏ செயலி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications