ஃபேஸ்புக் வதியுடன் புதிய போனை அறிமுகப்படுத்தும் டாடா டோக்கோமோ

Posted By: Staff

ஃபேஸ்புக் வதியுடன் புதிய போனை அறிமுகப்படுத்தும் டாடா டோக்கோமோ
ஃபேஷனாகி வரும் பேஸ்புக் வசதியை கொடுக்க இருக்கிறது டாட்டா டோக்கோமோ. இன்றளவில் இளைஞர்கள் தான் அதிகமாக பேஸ்புக் வசதியினை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் மொபைலிலேயே அந்த வசதி கிடைக்கும் என்றால் அனைவரும் தங்களது நண்பர்களுடன் எளிதாக சாட்டிங்கும், போட்டோ ஷேரிங்கும் செய்ய முடியும். இந்நிறுவனம் வெளியிட இருக்கும் இந்த மொபைலின் முக்கிய அம்சமே பேஸ்புக் வசதிதான்.

இதில் "எஃப்" என்ற பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பட்டனை அழுத்தினால் போதும், சுலபமாக ஃபேஸ்புக் பக்கத்துக்குள் நுழைந்துவிடலாம். நிச்சயம் இந்த வசதி வாடிக்கையாளைக் குதூகலப்படுத்தும். இதனால் எளிதாக பேஸ்புக்கில் எந்த தகவல்களையும் உடனுக்குடன் அப்டேட் செய்ய முடியும்.

இந்த புதிய மொபைல் 2.4 இஞ்ச் திரை வசதி கொண்டதாகவும், டைப் செய்வதற்கு எளிதாக இருக்க கியூவர்டிக் கீப்பேட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

சாதாரன மொபைலில் புகைப்படம் எடுப்பதற்கும் இந்த ஃபேஸ்புக் வசதி கொண்ட மொபைலில் புகைப்படம் எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால் இதில் உள்ள 2.0 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் துல்லியமான புகைப்படங்கள் எடுத்து, உடனடியாக ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்து மகிழலாம்.

புளூடூத், எப்எம் ரேடியோ, மீடியா ப்ளேயர் போன்ற வசதியினையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். சோஷியல் நெட்வொர் வசதிக்குன்டான அனைத்து சேவைகளையும் பெற முடியும்.

இதனுடைய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் டாட்டா டோக்கோமோ குறைந்த விலையில் இந்த மொபைலை வெளியிடும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஃபேஸ்புக் வசதி கொண்ட இந்த மொபைல் அடுத்த மாதத்திலேயே ஆச்சரயமூட்டும் வகையில் ரூ.2,500 விலையில் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot